Published:Updated:

How to series: How to make Mayonnaise at home? | வீட்டிலேயே சுலபமாக மயோனிஸ் தயாரிப்பது எப்படி?

Mayonnaise
News
Mayonnaise

இப்போது சிறிய கடைகளிலும் பல பிராண்ட்களில் மயோனிஸ் கிடைத்தாலும், ஆரோக்கிய உணவை விரும்புபவர்கள் வீட்டிலேயே மயோனிஸ் தயாரிக்கலாம். முட்டை சேர்த்து மற்றும் முட்டை சேர்க்காமல் மயோனிஸ் தயாரிக்கும் செய்முறையை இங்கு விளக்குகிறார், சமையல் கலைஞர் ஷோபனா ஹரி.

மேலை நாடுகளில் உணவு வகைகளில் பயன்படுத்தி வந்த மயோனிஸ் இப்போது இந்தியாவிலும் மக்களின் ஃபேவரைட் ஆகியுள்ளது. வயது பேதம் இல்லாமல் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவராலும் விரும்பப்படும் இந்த மயோனிஸில், அதன் செய்முறைதான் மிக முக்கியம்.

இப்போது சிறிய கடைகளிலும் பல பிராண்ட்களில் மயோனிஸ் கிடைத்தாலும், ஆரோக்கிய உணவை விரும்புபவர்கள் வீட்டிலேயே மயோனிஸ் தயாரிக்கலாம். முட்டை சேர்த்து மற்றும் முட்டை சேர்க்காமல் மயோனிஸ் தயாரிக்கும் செய்முறையை இங்கு விளக்குகிறார், சமையல் கலைஞர் ஷோபனா ஹரி.

ஷோபனா ஹரி
ஷோபனா ஹரி

முட்டை சேர்க்காத மயோனிஸ்:

தேவையான பொருள்கள்:
சமையல் எண்ணெய் (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தவிர்த்து) - ஒரு கப்
பால் - ஒரு கப் (இரண்டுமே கொஞ்சம் ஜில்லென்று இருக்க வேண்டும், அதனால் ஐந்து நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.)

உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எலுமிச்சை - அரை மூடி
வினிகர் - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை:

மிக்ஸி ஜாரில் பால் சிறிதளவு, எண்ணெய் சிறிதளவு சேர்க்கவும். கூடவே வினிகர் 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், சர்க்கரை 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, இரண்டு பல் பூண்டு (சிறிது சிறிதாக நறுக்கி) சேர்த்து மிக்ஸியில் 1, 2, 3 என பல்ஸ் வைத்து 40 நொடிகள் சுழற்றி எடுத்தால் முட்டை சேர்க்காத மயோனிஸ் ரெடி.

mayonnaise
mayonnaise

முட்டை சேர்த்த மயோனிஸ்:

தேவையான பொருள்கள்:
எண்ணெய் - ஒரு கப்
முட்டை - ஒன்று
சர்க்கரை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
கடுகுப்பொடி - 1/4 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு இரண்டையும் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் தனியாக எடுத்துவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, சிறிதளவு எண்ணெய், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், 1/4 டீஸ்பூன் சக்கரை, ஒரு டீஸ்பூன் வினிகர், 1/4 டீஸ்பூன் கடுகுப்பொடி சேர்த்து 40 நொடிகள் பல்ஸ் வைத்து அரைத்து எடுத்தால் முட்டை சேர்த்த மயோனிஸ் ரெடி.

இதேபோல, முட்டை மஞ்சள் கரு சேர்த்து மயோனிஸ் செய்ய, தனியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவில் சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு அடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கூடவே ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் வினிகர், 1/4 டீஸ்பூன் கடுகுப் பொடி சேர்த்து நன்றாக அடித்து எடுத்தால் மயோனிஸ் தயார்.

இதில் வித்தியாச சுவை வேண்டுமென்றால் புதினா இலை, அல்லது சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்துச் செய்யலாம்.

வீட்டிலேயே சுலபமாக நிமிடங்களில் செய்துவிடக்கூடிய இந்த மயோனிஸ், ரெடிமேடு மயோனிஸ் சுவையிலிருப்பதுடன் ரசாயனம் சேர்க்காத ஆரோக்கியத்துக்கும் உறுதியளிக்கும்.