Published:Updated:

How to: வீட்டிலேயே மொஸரெல்லா சீஸ் செய்வது எப்படி? I How to make Mozzarella cheese at home?

Mozzarella cheese
News
Mozzarella cheese ( Pixabay )

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று, சீஸ். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் என ஆரம்பித்து கேக், ஐஸ்கிரீம் என சீஸ் பல உணவுகளில் இடம் பிடிக்கிறது. சீஸில் பல வகை உள்ளது. அவற்றில், மொஸரெல்லா (Mozzarella) சீஸை வீட்டிலேயே எப்படி சுலபமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

Published:Updated:

How to: வீட்டிலேயே மொஸரெல்லா சீஸ் செய்வது எப்படி? I How to make Mozzarella cheese at home?

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று, சீஸ். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் என ஆரம்பித்து கேக், ஐஸ்கிரீம் என சீஸ் பல உணவுகளில் இடம் பிடிக்கிறது. சீஸில் பல வகை உள்ளது. அவற்றில், மொஸரெல்லா (Mozzarella) சீஸை வீட்டிலேயே எப்படி சுலபமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

Mozzarella cheese
News
Mozzarella cheese ( Pixabay )

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று, சீஸ். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் என ஆரம்பித்து கேக், ஐஸ்கிரீம் என சீஸ் பல உணவுகளில் இடம் பிடிக்கிறது.

சீஸ்
சீஸ்

சீஸில் பல வகை உள்ளது. அவற்றில், மொஸரெல்லா (Mozzarella) வகை சீஸை எப்படி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

- 2 லிட்டர் பதப்படுத்தப்படாத பால்
- நான்கு டீஸ்பூன் வினிகர்
- ஐஸ்கட்டிகள்
- வெந்நீர்

Mozzarella cheese
Mozzarella cheese
Pexels

* ஓர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பால் சேர்த்து குறைந்த அளவு தீயில் வைத்து, பொறுமையாக பால் சுண்டி வரும்வரை காய்ச்சவும். கவனத்தில் கொள்க... எந்த காரணத்திற்காகவும் அடுப்பை அதிக தீயில் வைக்கக் கூடாது.

* நன்றாக சுண்டி காய்ந்த பாலை அடுப்பில் இருந்து இறக்கவும். சிறிது சூடு குறைந்ததும் அதில் வினிகர் சேர்க்கவும்.

* பாலின் தன்மையை பொறுத்து சிறிது சிறிதாக வினிகர் சேர்த்துக் கொள்ளவும். பின்பு, பால் திரித்திரியாக பிரிய ஆரம்பிக்கும். பொறுமையாக இந்தச் செய்முறையை மேற்கொள்ளவும்.

* திரிந்த பாலை கொஞ்சம் பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதிகமாக இருக்கும் நீரை அப்புறப்படுத்தவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி, அதில் 5 முதல் 6 நிமிடங்கள் உருண்டைகளை அப்படியே போட்டு வைக்கவும்.

* 6 நிமிடங்களுக்குப் பின், அந்த உருண்டைகளை எடுத்து அதில் இருக்கும் நீரை பிழிந்து, மீண்டும் அதே நீரில் 6 நிமிடங்கள் வரை போட்டு வைக்கவும். இதே போன்று 2-3 முறை செய்யவும்.

Mozzarella cheese
Mozzarella cheese
Pexels

* அதன் பின் அதிலிருக்கும் நீரை வடிகட்டி, நன்றாகக் குளிர்ந்த நீர் நிரப்பிய பாத்திரத்தில் உருண்டைகளை 2 நிமிடங்கள் வரை போட்டு வைக்கவும். 2 நிமிடங்களுக்கு பின் அவற்றை எடுத்து அதிகப்படியான நீரை பிழிந்துகொள்ளவும். இந்த செய்முறையையும் 2-3 முறை செய்து கொள்ளவும்.

* தொடர்ந்து, நீரை வடிகட்டி எடுத்து வைத்தால் மொஸரெல்லா சீஸ் பயன்படுத்த தயாராகிவிடும். இதனை ஃப்ரீஸரில் வைத்து தேவையானபோது பயன்படுத்தலாம்.