Published:Updated:

How to series: வீட்டிலேயே கேக் செய்வது எப்படி? | How to prepare cake at home?

How to prepare cake at home?
News
How to prepare cake at home? ( Pixabay )

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்ட தினங்கள் வருகின்றன. இந்த சிறப்பு நாள்களில் உணவு வகைகளுள் ஸ்பெஷல் இடத்தைப் பிடிப்பதில் கேக் வகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்தவகையில், வீட்டிலேயே கேக் செய்து கொண்டாட சில ரெசிப்பீஸ் இதோ.

Published:Updated:

How to series: வீட்டிலேயே கேக் செய்வது எப்படி? | How to prepare cake at home?

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்ட தினங்கள் வருகின்றன. இந்த சிறப்பு நாள்களில் உணவு வகைகளுள் ஸ்பெஷல் இடத்தைப் பிடிப்பதில் கேக் வகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்தவகையில், வீட்டிலேயே கேக் செய்து கொண்டாட சில ரெசிப்பீஸ் இதோ.

How to prepare cake at home?
News
How to prepare cake at home? ( Pixabay )
ரெட் வெல்வெட் கேக் வித் க்ரீம் சீஸ் ஐசிங்

தேவையானவை - கேக் செய்ய:

  • மைதா - 150 கிராம்

  • கோகோ பவுடர் - 10 கிராம்

  • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

  • உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

  • உப்பு இல்லாத வெண்ணெய் - 50 கிராம்

  • சர்க்கரை - 150 கிராம்

  • முட்டை - ஒன்று

  • சூரியகாந்தி எண்ணெய் - 100 கிராம்

  • வினிகர் - 5 மில்லி

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • தயிர் - 100 மில்லி

  • ராஸ்பெர்ரி ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்

க்ரீம் சீஸ் செய்ய:

  • க்ரீம் சீஸ் - 250 கிராம்

  • விப்பிங் க்ரீம் - 150 கிராம்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • ஐசிங் சுகர் - 75 கிராம்

ரெட் வெல்வெட் கேக் வித் க்ரீம் சீஸ் ஐசிங்
ரெட் வெல்வெட் கேக் வித் க்ரீம் சீஸ் ஐசிங்
Pixabay

செய்முறை:

வெண்ணெயை நன்றாக அடித்து சர்க்கரை சேர்த்து நுரைபொங்க அடிக்கவும். முட்டையைச் சேர்த்து க்ரீமாக வரும்படி அடிக்கவும். பின்னர் சூரியகாந்தி எண்ணெய், வினிகர் சேர்த்து அடிக்கவும். வெனிலா எசென்ஸையும் தயிரையும் இத்துடன் சேர்த்து அடிக்கவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், ராஸ்பெர்ரி ஃபுட் கலர், உப்பை நன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும். அடித்துவைத்த கலவையுடன் இதைச் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய கேக் தட்டில் ஊற்றவும்.

ஓவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யவும் 10 நிமிடங்கள் கழித்து கேக் தட்டை வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் தயாரித்தவுடன் சிறிது நேரம் ஆறவிடவும். இரண்டு அல்லது மூன்று அடுக்காக குறுக்கில் வெட்டவும்.

க்ரீம் சீஸ் செய்யும் முறை:

க்ரீம் சீஸை நன்றாக அடித்து அதனுடன் கெட்டியாக அடித்த விப்பிங் க்ரீமை சேர்க்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ், ஐசிங் சுகர் சேர்த்து கெட்டியாக வரும்வரை அடித்து கேக் லேயரில் தடவவும். எல்லா பக்கமும் தடவிய பின் ஸ்டார் நாசில் (nozzle) பயன்படுத்தி டிசைன் செய்யவும். கொஞ்சம் ரெட் வெல்வெட் கேக் துகள்களை அலங்கரிக்க உபயோகிக்கவும்.

இதே கேக்கை குக்கரில் செய்யும் முறை:

குக்கரின் அடியில் 2 இன்ச் அளவுக்கு உப்பு போடவும். 10 நிமிடங்கள் அதிக தீயில் இருக்க வேண்டும் பின்னர் உப்பின் மேல் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் கேக் தட்டை வைத்து மிதமான தீயில் 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். குக்கரில் ரப்பர் (கேஸ்கட்), விசில் போட வேண்டாம். ரெட் வெல்வெட் கேக் தயார்

கேக் சிக்கில்

தேவையானவை

  • கேக் துகள்கள் - ஒரு கப்

  • விப்பிங் க்ரீம் - தேவையான அளவு

  • டார்க் சாக்லேட் - தேவையான அளவு

  • ஐஸ் குச்சி, ஸ்பிரிங்கிள்ஸ், உண்ண தகுந்த பூக்கள் (ஃபாண்டன்ட்) - தேவைக்கேற்ப

கேக் சிக்கில்
கேக் சிக்கில்

செய்முறை:

கேக்கை நன்றாக உதிர்க்கவும். அதனுடன் அடித்த விப்பிங் கிரீம் சேர்த்து வெடிப்பு இல்லாமல் நன்கு சாஃப்ட்டாக பிசையவும். அதை கேக் சிக்கில் மோல்டில் வைத்து ஐஸ் குச்சி வைத்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். டார்க் சாக்லேட்டை உருக்கி ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளவும். நன்றாக செட் செய்த கேக்கை இதில் டிப் செய்து வைக்கவும். அதன் மீது அலங்கரிக்க ஸ்பிரிங்கிள்ஸ், குட்டி குட்டியான ஃபாண்டன்ட் ஃப்ளவர்ஸ், க்ளிட்டர்ஸ் வைக்கலாம்.