Published:Updated:

பிரியாணிக்கு ஹைதராபாத், சினிமாவுக்கு மும்பை... இந்திய நகரங்களுக்கு யுனெஸ்கோ விருது!

சர்வதேச நகரங்களின் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளிலும் படைப்பாக்கச் சிறப்பும், பண்பாட்டுச் சிறப்பும் உடைய நகரங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வோராண்டும் அங்கீகாரம் அளித்து வருகிறது, யுனெஸ்கோ.

பிரியாணி
பிரியாணி

இசை, கலை, நாட்டுப்புறவியல், சினிமா, இலக்கியம், தொழில்நுட்பம், உணவு என பல்வேறு பிரிவுகளில் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. கலையினுள் பாரம்பர்யத்தையும் நவீனத்தையும் சரிவிகிதத்தில் கையாண்டு சமூகவெளியில் தலைசிறந்து விளங்கும் நகரங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பிரியாணி
பிரியாணி

இந்தாண்டிற்கான விருதுப் பட்டியலை வியாழனன்று வெளியிட்டது யுனெஸ்கோ. சர்வதேச அளவில் 66 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில் இந்திய நகரங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. உணவுப் பிரிவில் ஹைதராபாத் நகரமும், சினிமா பிரிவில் மும்பை நகரமும் இந்த விருதுக்காகத் தேர்வாகியுள்ளன.

`ஹைதராபாத் நிஜாம் பேரன்களுக்கே ரூ.350 கோடி!' - 60 ஆண்டுகளுக்குப் பிறகு  லண்டன் கோர்ட் தீர்ப்பு

பல்வேறு உணவு வகைகளை தெலுங்குகாரு கைவண்ணத்தில் ருசித்திருப்போம். கார நெடியும், கலர்ஃபுல் சுவையும் தூக்கலாகக் கொண்டது, ஆந்திர சமையல். தெலங்கானாவின் ஹைதராபாத் நகரம், ஹலீம் பிரியாணிக்குப் பெயர்போனது. 2010-ம் ஆண்டு யுனெஸ்கோவின் புவிசார் குறியீட்டைப் பெற்று கம்பீர மணத்தோடு நாசியையும் நாவினையும் தழுவுவது ஹைதராபாத் பிரியாணி. இந்த பிரியாணிதான், ஹைதராபாத்துக்கு யுனெஸ்கோ விருதைப் பெற்றுத் தந்துள்ளது. க்ரியேட்டிவ்வான சமையல் கலையைப் பெற்றுள்ள நகரம் என ஹைதராபாத் முடிசூடி உள்ளது.

பிரியாணி
பிரியாணி

இது தொடர்பாக யுனெஸ்கோவின் அட்ரய் அசௌலே கூறும்போது, ``ஒவ்வொரு நகரமும் தனக்கென தனித் தன்மையைக் கொண்டுள்ளது. பண்பாட்டை ஆதாரமாகக் கொண்டு விளங்குவதோடு புதிய பரிணாமங்களையும், படைப்புத்திறனையும் பெற்றிருக்கும் நகரங்களைத்தான் நாங்கள் விருதுக்குப் தேர்ந்தெடுக்கிறோம். இதனால் இதுபோன்ற நகரங்கள் அரசியல்வெளியிலும் சமூகவெளியிலும், குறிப்பாக இளைய தலைமுறையிடமும் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார்.

`2050-க்குள் மும்பை கடலுக்குள் போகும்?!' - முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயரும் கடல்மட்டம்!

சினி சிட்டி மும்பைக்கு, க்ரியேட்டிவ் சினிமா நகரத்துக்கான விருதை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. இந்த பிரிவுகள் மட்டுமன்றி, இன்னும் பல பிரிவுகளில் உலகம் முழுக்க உள்ள பல நகரங்கள் விருது பெற்றுள்ளன.