Published:Updated:

உக்ரைன்- ரஷ்ய போர் எதிரொலி; தானிய பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள்!

உணவு தானியம் (Representational Image)

உக்ரைனில் தற்போது நடந்து வரும் போர், இன்னும் பல வாரங்கள் தொடர்ந்தால், உக்ரேனியர்கள் கோதுமை பயிரிடுவது தடுக்கப்படும். மேற்கத்திய நாடுகளால் ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ரஷ்யா உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்வதும் தடுக்கப்படும்.

ரஷ்யாவும் உக்ரைனும் உலக அளவில் ஏற்றுமதி செய்யும் கோதுமையின் அளவு கிட்டத்தட்ட 30 சதவிகிதம். தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது தொடர்வதால், தவிர்க்க முடியாத தானிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகள் கவலை கொண்டுள்ளன.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. கோதுமை உற்பத்தியில் உக்ரைன் நான்காவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளும் இணைந்து 19 சதவிகித சோள ஏற்றுமதியைச் செய்து வருகின்றன.

கோதுமை
கோதுமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைனில் தற்போது நடந்து வரும் போர், இன்னும் பல வாரங்கள் தொடர்ந்தால், உக்ரேனியர்கள் கோதுமை பயிரிடுவது தடுக்கப்படும். மேற்கத்திய நாடுகளால் ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ரஷ்யா உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்வதும் தடுக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் விளைவாக, தானியங்களின் விலை தொடர்ந்து உயரும். பிரட், பால், இறைச்சி மற்றும் பிற பொருள்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் உள்ளன.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2020-ம் ஆண்டின் தரவுகளின்படி, லெபனான் 81 சதவிகிதம் கோதுமையை உக்ரைனிடமிருந்தும், 15 சதவிகிதம் கோதுமையை ரஷ்யாவிலிருந்தும் வாங்குகிறது. எகிப்து 60 சதவீத கோதுமையை ரஷ்யாவிலிருந்தும், 25 சதவிகித கோதுமையை உக்ரைனிடமிருந்தும் வாங்குகிறது.

ரஷ்யா உக்ரைன்  போர்
ரஷ்யா உக்ரைன் போர்

துருக்கியும் 66 சதவீத கோதுமையை ரஷ்யாவிலிருந்தும், 10 சதவிகித கோதுமையை உக்ரைனிலிருந்தும் இறக்குமதி செய்து வருகிறது.

எகிப்து, லெபனான், லிபியா மற்றும் துருக்கி போன்ற பல மத்திய கிழக்கு நாடுகள் தானியங்களுக்காக இவ்விரு நாடுகளையும் சார்ந்திருக்கும் பட்சத்தில், போரின் விளைவாக தானிய இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism