Published:Updated:

`லிஸ்ட் பெருசு... தேனீ, வண்டு, பட்டுப்புழு, பூச்சிகளை இனி உண்ணலாம்': சிங்கப்பூரில் விரைவில் அனுமதி!

insects fry ( pixabay )

உணவுக்காக பூச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டாலும் இவை உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாய் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மக்கள் விரைவில் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கவும் அனுமதி வழங்குவது தொடர்பாக சிங்கப்பூரின் உணவு நிறுவனம், உணவு மற்றும் கால்நடைத் தீவன தொழில் துறையில் இருந்து கருத்துகளைக் கோரியுள்ளது. 

`லிஸ்ட் பெருசு... தேனீ, வண்டு, பட்டுப்புழு, பூச்சிகளை இனி உண்ணலாம்': சிங்கப்பூரில் விரைவில் அனுமதி!
pixabay

ஒருவேளை பூச்சிகளை உண்ண அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், வண்டுகள், தேனீக்கள் மற்றும் அந்துப்பூச்சிகள் போன்றவற்றை அங்குள்ளவர்களால் உண்ண முடியும். இந்தப் பூச்சிகளை இவர்கள் நேரடியாகவோ அல்லது எண்ணெய்யில் பொரித்தோ தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உண்ணலாம் என சிங்கப்பூரில் உள்ள தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் (The Straits Times) நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. 

இத்தகைய பூச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டாலும் இவை உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்படும். 

`லிஸ்ட் பெருசு... தேனீ, வண்டு, பட்டுப்புழு, பூச்சிகளை இனி உண்ணலாம்': சிங்கப்பூரில் விரைவில் அனுமதி!
pixabay

பட்டுப்புழுவானது பாரம்பர்யமாக தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் உண்ணப்பட்டு வருகிறது. அதோடு பூச்சிகளை உண்ணும் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பூச்சிகளை உண்பது தொடர்பான நடைமுறைகளைப் பெற்றதோடு, இது குறித்த முழுமையான அறிவியல் மதிப்பாய்வையும்  சிங்கப்பூர் உணவுத்துறை நடத்தி உள்ளது.