Published:Updated:

பெங்களூரில் பில்டர் காபி குடித்த, ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl; ஊழியர்களுக்குப் பாராட்டு!

Zev Siegl

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் காபி ஹவுஸ்களுக்கு மிகவும் பிரபலம். அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட்டிலில் இதன் தலைமையகம் உள்ளது.

பெங்களூரில் பில்டர் காபி குடித்த, ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl; ஊழியர்களுக்குப் பாராட்டு!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் காபி ஹவுஸ்களுக்கு மிகவும் பிரபலம். அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட்டிலில் இதன் தலைமையகம் உள்ளது.

Published:Updated:
Zev Siegl

ஸ்டார்பக்ஸின் (Starbucks) இணை நிறுவனரான Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பதிக்கே லட்டா, பழனிக்கே பஞ்சாமிர்தமா எனப் பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அப்படியான ஒரு நிகழ்வுதான் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவமும்...

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் காபி ஹவுஸ்களுக்கு மிகவும் பிரபலம். அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட்டிலில் இதன் தலைமையகம்  உள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் கிளைகள் பல நாடுகளிலும் தங்களின் தடங்களைப் பதித்துள்ளது.

பெங்களூரில் பில்டர் காபி குடித்த, ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர்  Zev Siegl; ஊழியர்களுக்குப் பாராட்டு!
@VidyarthiBhavan

இந்நிலையில் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனரான Zev Siegl, மூன்று நாள்கள் நடைபெறும் `இன்வெஸ்ட் கர்நாடகா - உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில்’ கலந்து கொள்வதற்காகப் பெங்களூரு வந்துள்ளார். 

அப்போது பெங்களூரு, பசவனக்குடியில் உள்ள காந்தி பஜாரின் மையப்பகுதியில் அமைத்துள்ள பாரம்பர்ய தென்னிந்தியச் சைவ உணவகமான வித்யார்த்தி பவனுக்குச் (Vidyarthi Bhavan) சென்றவர், மசாலா தோசை சாப்பிட்டு, பில்டர் காபியையும் குடித்து, அதன் சுவை குறித்துப் பாராட்டியுள்ளார்.

மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அந்த உணவகத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணாவோடு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். 

அதோடு வித்யார்த்தி பவனுக்கு அவர் குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், `` என் நண்பர்களே... உங்களது புகழ்பெற்ற உணவு மற்றும் காபியை உண்டு ரசித்தது பெருமையாக உள்ளது. இது ஒரு அன்பான வரவேற்பு. இந்த அற்புதமான அனுபவத்தை என்னுடன் சியாட்டிலுக்கு எடுத்துச் செல்வேன்'' எனக் குறிப்பிட்டு இருந்தார். 

இது குறித்து வித்யார்த்தி பவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``வித்யார்த்தி பவனில் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். அவருக்கு எங்கள் உணவகத்தின் மசால் தோசை மற்றும் காபி பிடித்திருந்தது. 2022, உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில், அவர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக தற்போது பெங்களூரு வந்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தனர்.