உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கோவிட் தொற்றுநோய்ப் பரவல் போன்ற பாதிப்புகளால், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சிகிச்சை செலவானது 16 சதவிகிதம் வரை உயரும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த பாதிப்புகளால் `ரெடி டு ஈட்' உணவுகளுக்கான மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. வேர்க்கடலை, எண்ணெய், சர்க்கரை மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துகளைக் கொண்டு செய்யப்படும் உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆற்றலை வழங்கக் கொடுக்கப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் இந்த ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகள் (150) 6 முதல் 8 வாரங்கள் வரை போதுமானதாக இருக்கும். இதற்கு சராசரியாக 41 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும்.

அடுத்த ஆறு மாதங்களில் கூடுதல் நிதியுதவி இல்லாத காரணத்தினால் சுமார் 600,000 குழந்தைகள் இந்த அத்தியாவசிய சிகிச்சையை இழக்க நேரிடும். இது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் `பேரழிவு' நிலைக்கு வழிவகுக்கும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.