Published:Updated:

குழந்தைகளுக்குப் பிடிக்கிற வகையில் கீரை சாதம் தயாரிப்பது எப்படி? #VarietyRice

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகளுக்குப் பிடிக்கிற வகையில் கீரை சாதம் தயாரிப்பது எப்படி? #VarietyRice
குழந்தைகளுக்குப் பிடிக்கிற வகையில் கீரை சாதம் தயாரிப்பது எப்படி? #VarietyRice

குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்; சீக்கிரமாக கெட்டும் போகக்கூடாது. அப்படியொரு கீரை சாதம் எப்படித்  தயாரிப்பது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாரம் இரண்டு நாள் கீரை சாதம் சாப்பிட்டால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான். ஆனால், நம் வீட்டுப் பொடிசுகளுக்கு கீரை சாதத்தை லன்ச் பாக்ஸில் கட்டி அனுப்பினால், அது அலுங்காமல் அப்படியே வீட்டுக்குத்தானே திரும்பிவருகிறது. இதனாலே அம்மாக்கள் பலரும் குழந்தைகளுக்குக் கீரை சாதத்தைக் கட்டி அனுப்புவதில்லை. குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பது ஒரு பக்கம்; வெயில் காலங்களில் கீரை சாதம் சீக்கிரம் கெட்டுவிடும் என்பது இன்னொரு பக்கம். ஸோ, குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்; கெட்டும் போகக்கூடாது. அப்படியொரு கீரை சாதம் தயாரிப்பது எப்படி? இதோ சொல்கிறார், சமையல்கலை  நிபுணர் லதாமணி ராஜ்குமார்.

''கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள். இந்த மூன்றைவிட மணத்தக்காளிக் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, மணத்தக்காளிக் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது.  எனவே, அதில் ருசியாக க்ரீன் ரைஸ் எப்படித் தயாரிப்பது எனப் பார்ப்போம்.

    ஒரு கப் மணத்தக்காளிக் கீரையை பழுப்பில்லாமல் ஆய்ந்து, கல் உப்பு போட்ட தண்ணீரில் அலசி, மென்மையான துணியால் துடையுங்கள். அல்லது ஒரு   துணியில் போட்டு, ஃபேன் காற்றில் உலர வையுங்கள். கீரை நன்றாக உலர வேண்டியது முக்கியம். ஒரு கப்   கீரைக்கு, அரை டேபிள்ஸ்பூன் பருப்பு சேர்க்க வேண்டும். இதில், துவரம் பருப்பு பாதியும் பாசிப்பருப்பு பாதியும்  எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை வெறும் வாணலியில் வறுத்து, நன்கு ஆற விடுங்கள். காய்ந்த மிளகாய்   2, தட்டிப்போட்ட பூண்டுப்பற்கள் 2 ஆகியவற்றைத் தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடவும்.   பருப்பு  வகைகள், காய்ந்த மிளகாய், பூண்டு, தேவையான கல் உப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில்   போட்டு, இட்லிப் பொடிக்கு அரைப்பதுபோல லேசான கொரகொரப்புடன் அரைத்து, ஆற  வைத்துக்கொள்ளுங்கள். (இந்தப் பொடியை நிறைய செய்து காற்றுப்புகாத பிளாஸ்டிக் பாக்ஸில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்)

   இனி, ஃபேன் காற்றில் உலர்த்தப்பட்ட கீரையைப் பொடியாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு உடனே   வடிகட்டுங்கள். அல்லது, ஒரு இட்லி பாத்திரத்தில் மெல்லிய காட்டன் துணியை விரித்துப்போட்டு, அதன்மேலே நறுக்கிய கீரையை வைத்து, 5 நிமிடங்கள் ஆவியில் வேக வையுங்கள். கொதிக்கும் நீரில் கீரையைப் போட்டு வடிகட்டுவதாக இருந்தால், அந்தத் தண்ணீரை வீணாக்காமல் சூப்பாகச் செய்து குடித்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு, ஒரு பட்டை, ஒரு லவங்கம், பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்குங்கள். இதனுடன் சிறிதளவு கரம் மசாலாவைத் தூவிக்கொள்ளுங்கள். பிறகு, அரைத்து வைத்துள்ள பருப்புப்பொடி மற்றும் ஆவியில் வெந்த கீரையைப் போட்டு, தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதில், உதிர் உதிராக வடித்த பாஸ்மதி சாதத்தைக் கலக்குங்கள். நெய்யில் வறுத்த முந்திரிகளால் அலங்கரியுங்கள். 

குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற சத்தான கீரை சாதம் ரெடி! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு