Published:Updated:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டிரை ஃப்ரூட்ஸ் ரெசிப்பி

நட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டிரை ஃப்ரூட்ஸ் ரெசிப்பி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டிரை ஃப்ரூட்ஸ் ரெசிப்பி

தினமும் ஒருவகை ட்ரை ஃப்ரூட்ஸ்  சரியான அளவில் எடுத்துக்கொள்வதால் எடையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலை எழுந்ததும் பாலுடன் சேர்த்தோ, நீரில் ஊறவைத்தோ இதைச் சாப்பிட்டால், நாள் முழுக்க புத்துணர்வு கிடைக்கும்.


டிரை ஃப்ரூட் சிக்கி :

தேவையானவை:
பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
வறுத்த வெள்ளை எள் – கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாக  தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

டிரை ஃப்ரூட் குக்கீஸ்
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்
பொடித்த ஓட்ஸ் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
துருவிய வெல்லம் – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு


செய்முறை:
கோதுமை மாவுடன் ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உலர்திராட்சை, நறுக்கிய பாதாம், முந்திரி,  மாவு கலவை சேர்த்துக் கலக்கவும். சுத்தமான சமையல் மேடையில் நெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, கனமான சப்பாத்தியாகத் தேய்க்கவும். பிறகு, குக்கி கட்டர் கொண்டு துண்டுகளாக்கவும் (கத்திகொண்டும் செய்யலாம்). 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஓரங்கள் லேசாகப் பழுப்பு நிறமானதும் எடுக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு மீண்டும் 2 - 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.\

டிரை ஃப்ரூட் சாக்லேட் ப்ரவுனி 
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்
வெதுவெதுப்பான பால் – கால் கப்
தயிர் – ஒரு கப்
கோகோ பவுடர் – அரை கப்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
சாக்லேட் எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்
பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வால்நட் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
பொடித்த சர்க்கரை  - ஒரு கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சுல்தானா உலர்திராட்சை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் கப்
எண்ணெய் – அரை கப்
மைதா மாவு - சிறிதளவு


 

செய்முறை:
கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், காபி பவுடர் சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலக்கவும். தயிருடன் எசன்ஸ், எண்ணெய், பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தயிர் கலவையுடன் கோதுமை மாவு கலவையைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி சிறிதளவு மைதா மாவைத் தூவவும். இதன் மீது மாவுக் கலவையை ஊற்றவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 35 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பிறகு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.