பப்பாளி ப்யூரி

தேவை: பப்பாளி – அரை கப் தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

தோல், விதைகளை நீக்கி பப்பாளியைத் துண்டுகளாக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் கூழ் பதத்தில் அரைக்கவும். பப்பாளி ப்யூரி தயார். பழுக்காத பப்பாளியாக இருந்தால், அதை நான்கைந்து நிமிடங்கள் குக்கரில் வேகவைத்த பின்னர் அரைக்கவும்.

குறிப்பு: ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைக்கு ஏற்றது இந்த ப்யூரி. எட்டு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதனுடன் வாழைப்பழ ப்யூரியைச் சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம்.

அரிசிக் கஞ்சி

தேவை: பொன்னி அரிசி - ஒரு கப் தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி, தண்ணீரை வடிகட்டவும். உலர்ந்த துணியில் அரிசியைப் போட்டு உலரவிடவும். பின்னர் சூடான வாணலியில் அரிசியைப் போட்டு வறுக்கவும். வறுத்த அரிசியை பவுடராக அரைத்து உலர்வான பாட்டிலில் சேமித்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் அரைத்துவைத்த பவுடரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து வேகவிடவும்.

5 முதல் 7 நிமிடங்கள் கழித்து கஞ்சி கெட்டியானதும் இறக்கி விடலாம்.

குறிப்பு: ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கஞ்சி. இவற்றுடன் ஏதாவது ஒரு பழ ப்யூரி அல்லது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் சேர்த்தும் கொடுக்கலாம்.

ஸ்டீம்டு ஆப்பிள் ப்யூரி

தேவை: இனிப்பான ஆப்பிள் – ஒன்று தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

ஆப்பிளை நன்கு கழுவவும். பின்னர் அதன் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை தேவையான அளவு தண்ணீர்விட்டு குக்கரில் வேகவிடவும். பிறகு வேகவைத்த ஆப்பிளை ஆறவிட்டு ப்யூரியாக மசித்துக்கொள்ளவும். ஸ்டீம்டு ஆப்பிள் ப்யூரி தயார்.

குறிப்பு: ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இது. விருப்பப்பட்டால், குழந்தைக்குக் கொடுக்கும் முன் இதில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் சேர்க்கலாம். பசும்பால் சேர்க்கக் கூடாது.

கிவி யோகர்ட் ப்யூரி

தேவை: கிவிப்பழம் – ஒன்று ஹோம்மேட் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கிவிப்பழத்தை நறுக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை முள் கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் தயிரைச் சேர்த்துக் கலக்கவும். கிவி யோகர்ட் ப்யூரி தயார்.

குறிப்பு: ஏழு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இந்த ப்யூரியைக் கொடுக்கலாம்.

தினை வெஜ் கிச்சடி

தேவை: ஆர்கானிக் தினை – கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டு – 2 பல் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

தினை, பாசிப்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி சீரகத்தூள், பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, பச்சைப் பட்டாணி, கேரட் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து ஊறவைத்த தினை, பருப்பு இரண்டையும் இதனுடன் சேர்க்கவும். பிறகு இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடவும். 2 - 3 விசில் வரும்வரை வேகவிடவும். பின்னர் கரண்டியால் கிச்சடியை நன்கு கலக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இந்தக் கிச்சடியைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் வரைக்கும் இதுபோன்ற உணவுகளில் உப்பு சேர்க்க வேண்டாம்.

தக்காளி இஞ்சி பீட்ரூட் சூப்

தேவை: தக்காளி – 2 பீட்ரூட் – ஒரு துண்டு இஞ்சி – கால் இன்ச் துண்டு மிளகுத்தூள் - சிறிதளவு.

செய்முறை:

தக்காளியை நறுக்கவும். பீட்ரூட், இஞ்சியைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கவும். இவை அனைத்தையும் குக்கரில் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு வேகவிடவும். வேகவைத்த காய்கறிகளைக் கூழாக அரைத்து, தேவையான நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாக்கவும். பின்னர் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடவும். இளஞ்சூடாக இந்த சூப்பை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

குறிப்பு: ஏழு - எட்டு மாதங்களில் இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது இந்த சூப்.

தினை தயிர் சாதம்

தேவை: தினை – கால் கப் தயிர் – அரை கப்.

செய்முறை:

தினையை நன்கு கழுவி 10 - 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் கனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி, தினையை அதில் சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். பிறகு பாத்திரத்தைக் கீழே இறக்கவும். தினையை ஆறவைத்து, நன்கு மசித்து, தயிர் சேர்த்துப் பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

கேரட் பீட்ரூட் ப்யூரி

தேவை: நடுத்தர அளவிலான கேரட் – ஒன்று நடுத்தர அளவிலான பீட்ரூட் – பாதி அளவு.

செய்முறை:

கேரட், பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறிகளை நன்கு மசித்து ப்யூரியாக அரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிதளவு நெய் சேர்க்கலாம்.

குறிப்பு: ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்றது.

சூஜி உப்புமா

தேவை: ரவை – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை சிறிய கேரட் – ஒன்று (துருவவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நெய் – ஒரு டீஸ்பூன் சீரகம் – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, சீரகம் சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் துருவிய கேரட், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் ரவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான வெந்நீரை ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். மிதமான தீயில் 3 - 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

குறிப்பு: ஏழு - எட்டு மாதங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்றது இந்த உப்புமா.

ஜவ்வரிசி டேட்ஸ் கஞ்சி

தேவை: ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன் விதை நீக்கிய பேரீச்சை – 2 அல்லது 3 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஜவ்வரிசியைக் கழுவி, போதுமான தண்ணீர் ஊற்றி 4 - 5 மணி நேரம் ஊறவிடவும். பேரீச்சையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸியில் பேரீச்சையை நன்கு அரைத்துக்கொள்ளவும். கனமான ஒரு பாத்திரத்தில் பேரீச்சைக் கூழ், ஊறவைத்த ஜவ்வரிசி, அரை கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 7 - 10 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் கீழே இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இந்தக் கஞ்சியை எட்டு மாதக் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

சம்பா கோதுமை பறங்கிக்காய் கஞ்சி

தேவை: நறுக்கிய பறங்கிக்காய் – கால் கப் சம்பா கோதுமை - 2 டேபிள்ஸ்பூன் நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் நெய்விட்டு சம்பா கோதுமையைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு இதனுடன் பறங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்துச் ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். இறக்கியதும் நன்கு மசித்து இளஞ்சூடாக குழந்தைக்குத் தரலாம்.

குறிப்பு: எட்டு மாதக் குழந்தைக்கு ஏற்றது இந்தக் கஞ்சி.

தக்காளி கம்பு கஞ்சி

தேவை: பெரிய தக்காளி – ஒன்று கம்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் நெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, தக்காளியைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு தக்காளியின் தோலை உரித்து, துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் அதைச் சூடாக்கவும். கலவை சூடானதும் அதில் தக்காளிக் கூழையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அடிக்கடி கிளறிவிட்டு கஞ்சி கெட்டியானதும் நெய் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடலாம்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கஞ்சி.

கொண்டைக்கடலை கீரை ப்யூரி

தேவை: பாலக்கீரை (நறுக்கியது) - அரை கப் பூண்டு – 2 பல் கொண்டைக்கடலை – கால் கப்.

செய்முறை:

தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள், குக்கரில் கொண்டைக்கடலையை மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். ஒரு கப் கொதிக்கும் நீரில் கீரை, பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி அதில் உள்ள கீரை, பூண்டை எடுத்து, அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கூழாக்கவும். இந்தக் கூழை மீண்டும் அடுப்பில் ஏற்றி லேசாகச் சூடு செய்தபின் குழந்தைக்குத் தரலாம்.

குறிப்பு: இந்த ப்யூரி எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது.

வெஜ் பான்கேக்

தேவை: தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - ஒரு கரண்டி கடலை மாவு - கால் கப் நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கீரை, தக்காளி, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியான ஊத்தப்ப மாவுப் பதத்தில் கரைக்கவும். தவாவைச் சூடாக்கி, மாவை சின்ன சின்ன பான்கேக்குகளாக ஊற்றி, நெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: எட்டு மாதக் குழந்தைக்கு ஏற்றது இந்தப் பான்கேக்.

சப்போட்டா ப்யூரி

தேவை: சப்போட்டா - 2 (பழுத்தது) தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

சப்போட்டா பழத்தின் தோல், விதை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அல்லது முள்கரண்டியால் மசித்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து ப்யூரியாக மாற்றவும்.

குறிப்பு: பழத்தை அரைத்து, தண்ணீர் சேர்க்காமல் அப்படியே குழந்தைக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல சப்போட்டாவின் தோல் நீக்கி மட்டுமே ப்யூரி தயாரிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்றது.

பட்டாணி ப்யூரி

தேவை: பச்சைப் பட்டாணி - அரை கப் தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

பச்சைப் பட்டாணியை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின்னர் வேகவைத்த பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து கூழ் பக்குவத்தில் தயாரிக்கவும்.

குறிப்பு: பசும்பால், உப்பு, சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைக்கு ஏற்றது இந்த ப்யூரி.

ஸ்ட்ராபெர்ரி தயிர் ப்யூரி

தேவை: கெட்டித் தயிர் – கால் கப் ஸ்ட்ராபெர்ரி – கால் கப்.

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரியைக் கழுவித் துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இந்தக் கூழைக் கெட்டித் தயிரில் சேர்த்து நன்கு கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.

ஓட்ஸ்மீல் கஞ்சி

தேவை: ஆர்கானிக் ஓட்ஸ் - 2 டீஸ்பூன் ஃபார்முலா பால் - சிறிதளவு.

செய்முறை:

ஆர்கானிக் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை உலர்வான டப்பாவில் அடைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். பின்னர் இதை அடுப்பில் வைத்துக் கிளறி 5 நிமிடங்கள் வேகவைக்கவும். கஞ்சி கெட்டியானதும் இறக்கவும். பிறகு இதில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்துக் குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: இதில் ஏதாவது ஒரு பழ ப்யூரியைக்கூட சேர்க்கலாம். ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது.

காலிஃப்ளவர் பனீர் கஞ்சி

தேவை: காலிஃப்ளவர் - கால் கப் பனீர் - 2 சதுர அளவு (க்யூப்ஸ்) ஃபார்முலா பால் – சிறிதளவு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

காலிஃப்ளவரை நன்கு கழுவி, 15 நிமிடங்கள் தண்ணீரில் வேகவிடவும். வேகவைத்த காலிஃப்ளவரை இளஞ்சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர் பனீரையும் போட்டு அரைக்கவும். பிறகு இதனுடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.

சோளம் டீத்திங் பிஸ்கட்

தேவை: வெள்ளை சோள மாவு – ஒரு கப் (மக்காசோளம் அல்ல) ஓட்ஸ் பவுடர் – அரை கப் வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன் பழுத்த வாழைப்பழம் – ஒன்று அல்லது இரண்டு.

செய்முறை:

180 டிகிரி அளவுக்கு அவனை (oven) பிரீஹீட் செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, ஓட்ஸ் பவுடர், பட்டைத்தூள் கலந்து வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை அரைத்து கூழாக்கிச் சேர்த்து அதனுடன் வெள்ளை எள், எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இந்தக் கூழை கலந்துவைத்திருக்கும் மாவில் கொட்டிக் கிளறிப் பிசையவும். மிருதுவான மாவாகப் பிசைந்ததும், மாவை இரண்டாகப் பிரித்து, திக்கான ஷீட்டில் கால் இன்ச் அளவுக்கு மாவைத் திரட்டி விரும்பிய வடிவத்தில் பிஸ்கட்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த பிஸ்கட்டுகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து 180 டிகிரி செல்ஷியஸில் 17 - 20 நிமிடங்கள் வேகவிடவும். எல்லா `அவன்’களின் செட்டிங்ஸ் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால், பிஸ்கட் 15 நிமிடங்களுக்கு மேலேயே அடிப்பிடித்துவிடாமல் கவனமாகப்பார்த்துக்கொள்ளவும். பின்னர் சூடு ஆறியதும் பிஸ்கட்டை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இந்த பிஸ்கட் ஏற்றது.

மஞ்சள் கரு ப்யூரி

தேவை: முட்டை – ஒன்று ஃபார்முலா பால் - சிறிதளவு.

செய்முறை:

முட்டையை நன்கு கழுவி, நீரில் போட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவிடவும். பின்னர் அதைக் குளிர்ந்த நீருக்கு மாற்றி, பிறகு அதன் ஓட்டைப் பிரிக்கவும். பிறகு முட்டையை எடுத்து நறுக்கினால் அதன் மஞ்சள் கரு மட்டும் தனியாக வரும். இந்த மஞ்சள் கருவை ஸ்பூனால் மசித்து, சிறிது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கலந்து ப்யூரியாகக் கொடுக்கலாம்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்த ப்யூரி.

கறுப்பு உளுந்து கிச்சடி

தேவை: அரிசி - 2 டேபிள்ஸ்பூன் தோல் உள்ள கறுப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு – 2 பல் கேரட் - பாதி அளவு (துருவவும்) மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை சீரகம் – கால் டீஸ்பூன் நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அரிசி மற்றும் கறுப்பு உளுந்தை தனித்தனியாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் நெய்விட்டு, சீரகம் தாளிக்கவும். அதில் பூண்டு, கேரட் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறவைத்த அரிசி, உளுந்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 2 - 3 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் இந்தக் கிச்சடியைக் கைகளாலே நன்கு மசித்து குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கிச்சடி.

கேரட் உருளைக்கிழங்கு ஆப்பிள் சூப்

தேவை: தோல் நீக்கி நறுக்கிய கேரட் – கால் கப் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப் தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள் – கால் கப் பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

காய்கறிகளைத் தண்ணீரில் போட்டு மூடிவைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் இதிலேயே நறுக்கிய ஆப்பிளையும் போட்டு இன்னும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்த அனைத்தையும் ஆறவைத்துக் கூழாக்கி, அதில் பட்டைத்தூள் சேர்த்து குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்த சூப்.

பச்சைப் பயறு கஞ்சி

தேவை: பச்சைப் பயறு – கால் கப் பூண்டு – ஒரு பல் (நறுக்கவும்) வறுத்துப் பொடித்த பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை ஃபார்முலா பால் - சிறிதளவு.

செய்முறை:

பச்சைப் பயற்றை நன்கு கழுவி, 2 - 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சைப் பயறு, பூண்டு சேர்த்து 3 - 4 விசில் வரும் வரை வேகவிடவும். பயறு நன்கு வெந்ததும் அதை ஸ்பூனால் மசித்து, தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்துக் கலக்கவும். பின்னர் பட்டைத்தூள் சேர்த்துக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: இதை எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

ராகிப்பால் கஞ்சி

தேவை: ராகி (கேழ்வரகு) - அரை கப் நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ராகியைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி கல், மண், தூசு எடுக்கவும். பின்னர் இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, மீண்டும் ராகியைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த ராகியை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை மஸ்லின் துணியில் போட்டு ராகிப்பாலைப் பிழிந்து எடுக்கவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் ராகிப்பாலை ஊற்றவும். கெட்டியாக இருந்தால் சிறிதளவு நீர் சேர்க்கவும். பின்னர் இதை மிதமான தீயில் வைத்து ராகிப்பால் கெட்டியாகும்வரை கலக்கவும். கலவை கெட்டியானதும் சிறிது நெய் ஊற்றி இறக்கிவிடவும்.

குறிப்பு: ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

பம்ப்கின் மூங்தால் கஞ்சி

தேவை: பூசணித்துண்டுகள் – கால் கப் பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் நெய் – ஒரு டீஸ்பூன் பூண்டு – ஒரு பல் வெங்காயம் – பாதி அளவு (பொடியாக நறுக்கவும்) வறுத்துப் பொடித்த பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாசிப்பருப்பைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் பூசணித்துண்டுகள் சேர்க்கவும். பிறகு ஒன்றரை கப் தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேகவிடவும். வேகவிட்டு இறக்கியதை நன்கு அரைத்துக் கூழாக்கி, அதில் பட்டைத்தூள் சேர்த்து, பின்பு குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: ஏழு - எட்டு மாதங்களில் இருக்கும் குழந்தைக்கு இதைக் கொடுக்கலாம்.

கோகனட்மில்க் ரைஸ் புடிங்

தேவை: பாஸ்மதி அரிசி - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப் உலர்ந்த டேட்ஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் பாதாம் பவுடர் – கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாஸ்மதி அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவிடவும். அரிசியுடன் சிறிதளவு நீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு கனமான பாத்திரத்தில் அரைத்த அரிசி கூழ், தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். 5 - 7 நிமிடங்கள் கட்டி தட்டாமல் கிளறி வேகவிடவும். பின்னர் இதில் டேட்ஸ் பவுடர், பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதை 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

சிவப்பு குடமிளகாய் உருளைக்கிழங்கு ப்யூரி

தேவை: உருளைக்கிழங்கு - ஒன்று (சிறியது) நடுத்தர அளவிலான சிவப்பு குடமிளகாய் – பாதி அளவு.

செய்முறை:

தோல் நீக்கிய உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி 10 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் இதிலேயே மெலிதாக நறுக்கிய சிவப்பு குடமிளகாயைப் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சூடு ஆறியதும் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, கூழாக அரைக்கவும். இளஞ்சூடாக குழந்தைக்குக் கொடுக்கவும்.

குறிப்பு: ஏழு - எட்டு மாதக் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

சுரைக்காய் மசூர் பருப்பு சூப்

தேவை: தோல் நீக்கி நறுக்கிய சுரைக்காய் – கால் கப் மசூர் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு – ஒரு பல் நெய் – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

மசூர் பருப்பைக் கழுவி நீரை வடிக்கட்டவும். குக்கரில் நெய்விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் மசூர் பருப்பு, நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கலந்து குக்கரை மூடவும். 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு கலவையை நன்கு மசித்து மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொடுக்கவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீரை ப்யூரி

தேவை: பாலக்கீரை (நறுக்கியது) - அரை கப் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக்கியது) - அரை கப் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கை 15 - 20 நிமிடங்களுக்குச் சிறிதளவு தண்ணீரில் வேகவிடவும். அதுபோல கீரையை நன்கு கழுவி சிறிதளவு தண்ணீர் தெளித்து, 5 - 7 நிமிடங்கள் வேகவிட்டு ஆறவிடவும். பிறகு கிழங்கு, கீரை இரண்டையும் சேர்த்து அரைத்துக் கூழாக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான ப்யூரி பதத்தில் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கொடுக்கவும்.

இப்படித்தான் ஊட்டணும்!

குழந்தை வளர்ப்பு பற்றிய பல சந்தேகங்களைத் தீர்த்துவைத்து, குழந்தைகளுக் கான உணவு வகைகள் தயாரிப்பிலும் இறங்கி பெண் தொழில்முனைவோராகவும் பரிணமித்து பெண் மருத்துவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் mylittlemoppet.com இணையதள நிர்வாகி டாக்டர் ஹேமா பிரியா. 30 வகை உணவுகளின் செய்முறையோடு, மருத்துவ விளக்கமும் அளிக்கிறார் அவர்.

குழந்தைகளுக்குத் திட உணவை எப்போது கொடுப்பது?

குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை, தாய்ப்பாலைக் கொடுப்பது மிக மிக நல்லது. ஆறு மாதங்கள் முடிந்த குழந்தைக்கு திட உணவும் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம்.

புதிய உணவை எப்படி ஆரம்பிக்க வேண்டும்?

முதல் நாளில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கொடுக்கலாம். இரண்டாவது நாளில், இரண்டு டேபிள்ஸ்பூன் அளவில் இரண்டு வேளைக்குத் தரலாம். மூன்றாவது நாளில், மூன்று டேபிள்ஸ்பூன் அளவில் மூன்று வேளைக்குத் தரலாம். எந்தப் புதிய உணவை அறிமுகப்படுத்தினாலும் வயதுக்கு ஏற்ற பரிந்துரைகளைப் பின்பற்றுங்கள்.

குழந்தைக்கு உணவைக் கொடுக்கும் முறை?

எப்போதுமே குழந்தைக்கு உணவு ஊட்டும்போது, குழந்தையை உட்காரவைத்து உணவு வழங்குவது நல்லது. படுக்கவைப்பதைத் தவிர்க்கலாம். மிருதுவான முனைகொண்ட ஸ்பூனாக இருந்தால், குழந்தைகளின் மென்மையான ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. உணவைக் கொடுக்கும் முன் உணவின் சூட்டைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். கொடுக்கும் திட உணவு சற்று கெட்டித்தன்மையுடன் இருந்தால்தான் ஸ்பூனிலிருந்து கீழே விழாது.

எந்த உணவானாலும் 2 மணி நேரத்துக்குள்ளே கொடுத்துவிடுவது நல்லது. மீதம் இருப்பதைக் கொட்டிவிடுங்கள். ஒரு வயது முடியாத குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை, தேன், பசும்பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

எட்டு மாதக் குழந்தைக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ்!

ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ் எனப்படும் கைகள் மற்றும் அதன் விரல்களின் இயங்குதிறன் வளர்ச்சியடைந்த பின்னர், அதாவது எட்டு மாத அளவில் ஃபிங்கர் ஃபுட்ஸை வழங்கலாம். குழந்தையின் தசைகள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், பெரிய, கெட்டித்தனமான, குழந்தை சரியாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் ‘ஃபிங்கர் ஃபுட்ஸ்’ இருக்க வேண்டியது அவசியம். இரண்டு இன்ச் அளவில் உள்ள ஃபிங்கர் ஃபுட்ஸை வழங்குதல் சரியாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடும்படி நீங்கள் அளவை அமைத்துக்கொள்ளலாம். ஸ்டீம்டு, பேக்டு காய்கறிகள், மிருதுவான பழங்களை முதல் முதலாக ஃபிங்கர் ஃபுட்ஸாகக் கொடுக்கலாம். அதில் விதைகள் இல்லாதபடி உறுதி செய்துகொள்ளுங்கள். புரையேறவோ, அடைத்துக்கொள்ளவோ செய்யலாம் என்பதால் ஃபிங்கர் ஃபுட்ஸைக் கொடுத்துவிட்ட பின் குழந்தையைக் கவனிக்காமல் இருக்க வேண்டாம்.

காம்பினேஷன் உணவுகளை அறிமுகப்படுத்துதல் எப்போது?

ஒரே ஓர் உணவைக் கொடுப்பதை, ஸ்டேஜ் ஒன் என்பார்கள். குழந்தையின் செரிமான மண்டலம் நன்கு வளர்ச்சி பெற்ற பின்னர், புது வகை உணவுகளை கலந்து கொடுக்கலாம். இதுவே ஸ்டேஜ் டூ அல்லது ‘காம்பினேஷன் உணவுகள்’. உருளைக்கிழங்கை மற்ற காய்கறிகளுடன் சேர்த்துக் கொடுக்கலாம். வாழைப்பழம் அல்லது ஆப்பிளை மற்ற பழங்களுடன் சேர்த்துக் கொடுக்கலாம். ஆப்பிள் - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, அரிசி அல்லது ஓட்ஸ் என இவற்றுடன் மற்ற உணவுகளைக் கலந்து கொடுக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்