Published:Updated:

மதுர மக்கள் - 6 | "அதே பால், அதே சீனி, அதே பிசின்... ஆனா டேஸ்ட்?!"- `பேமஸ் ஜிகர்தண்டா' ஜிந்தா மதார்

மதுர மக்கள் -6 |  ஜிந்தா மதார்
News
மதுர மக்கள் -6 | ஜிந்தா மதார்

''இன்னைக்கு யு-ட்யூப்ல 'ஜிகர்தண்டா செய்வது எப்படி?'னு டைப் பண்ணா வர்ற வீடியோக்கள்ல பயன்படுத்துற அதே பொருள்தான் நாங்களும் பயன்படுத்துறோம். அதே பால், அதே சீனி, அதே பாதாம் பிசின். ஆனாலும் நம்ம கடைக்குன்னு தனி டேஸ்ட்னு சொல்றதை கேட்குறப்போ...''

Published:Updated:

மதுர மக்கள் - 6 | "அதே பால், அதே சீனி, அதே பிசின்... ஆனா டேஸ்ட்?!"- `பேமஸ் ஜிகர்தண்டா' ஜிந்தா மதார்

''இன்னைக்கு யு-ட்யூப்ல 'ஜிகர்தண்டா செய்வது எப்படி?'னு டைப் பண்ணா வர்ற வீடியோக்கள்ல பயன்படுத்துற அதே பொருள்தான் நாங்களும் பயன்படுத்துறோம். அதே பால், அதே சீனி, அதே பாதாம் பிசின். ஆனாலும் நம்ம கடைக்குன்னு தனி டேஸ்ட்னு சொல்றதை கேட்குறப்போ...''

மதுர மக்கள் -6 |  ஜிந்தா மதார்
News
மதுர மக்கள் -6 | ஜிந்தா மதார்

''கிட்டத்தட்ட நாப்பது வருட உழைப்பு இது. அப்பாவுக்கு பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். தொழில் வேலைவாய்ப்புக்காக 1968-ல் அப்பாவும், அம்மாவும் மதுரைக்கு வந்தாங்க. ஐஸ்கிரீம் வியாபாரம்தான். தள்ளுவண்டில வச்சு விக்க ஆரம்பிச்சாங்க. அப்போ நாங்களாம் ரொம்ப சின்ன பசங்க... இந்த ஐஸ்கிரீம் வியாபாரத்தைத் தொடர்ந்து பண்ணி ஒரு கட்டத்துல இதுல எதாவது வித்தியாசமா செய்யலாம்னு எங்க அப்பாவும், அம்மாவும் செஞ்சதுதான் ஜிகர்தண்டா. இந்த டேஸ்ட் மக்கள்கிட்ட ரீச்சாகுறதுக்கு ஏழு எட்டு வருஷம் ஆச்சுன்னு சொல்லுவாங்க“ உலகப்புகழ் மதுரை 'பேமஸ் ஜிகர்தண்டா' கடையின் உரிமையாளர் ஜிந்தா மதாருடன் பேசும்போதே அத்தனை சந்தோஷமும் உற்சாகமும் தொற்றிக்கொள்கிறது.

மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உரிமையாளர் ஜிந்தா மதார்
மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உரிமையாளர் ஜிந்தா மதார்

''சாயங்காலம் ஆறு மணில இருந்து பத்துமணிவரைக்கும்னு இதே விளக்குத்தூண் ரோட்டுல தள்ளுவண்டில போட்டுத்தான் அப்பா நிப்பார். மழை, வெயில்னு காலநிலை மாறும்போதெல்லாம் சிக்கல்தான். அன்னைக்கு வியாபாரம் இருந்தாத்தான் மறுநாள் பொழப்பு. நாங்க அண்ணன் தம்பி நாலு பேர். இப்படி அப்பா கஷ்டப்படுறதைப் பார்த்து நாங்களும் அவருக்கு உதவியா இருக்கணும்னு அப்பா கூடவே ஜிகர்தண்டா கடையில நிக்க ஆரம்பிச்சிட்டோம். வெயில் காலத்துல ஐஸ்பார் கரையவிடாம பார்த்துக்கணும். சணல் சாக்க நல்லா ஈரப்படுத்தி ஐஸ்பெட்டி மேல சுத்தி வெச்சுக்குவோம். வெயில் காலத்துல இப்படி பிரச்னைன்னாலும், வியாபாரம் தூக்கலா இருக்கும். மழைகாலத்துல இது அப்படியே தலைகீழா மாறிடும். பொருளுக்கு சேதாரம் இருக்காது. ஆனா மழையில குடிக்க ஆளு வரணுமே... வியாபாரம் டல்லாகிரும். புது ருசின்னு விலகி நின்னவங்களும் இருக்காங்க, புதுசா முயற்சி பண்ணுவோம்னு வந்த வாடிக்கையாளரும் இருக்காங்க. இப்படித்தான் ஆரம்ப நாட்கள் அமைஞ்சது'' என்றார் ஜிந்தா மதார்.

''இன்னைக்கு மதுரைல எங்க திரும்புனாலும் ஜிகர்தண்டா கடையாவே இருக்கே... இதைப்பார்க்குறப்போ எப்படி இருக்கும்?''

''அன்னைக்கு ஜிகர்தண்டானா நம்ம கடைமட்டும்தான். ஆனா இன்னைக்கு இவ்வளவு கடைகள் பார்க்குறப்போ, நாம ஆரம்பிச்ச விஷயம் இன்னைக்கு எல்லாரும் ஃபாலோ பண்றாங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா, இவ்வளவு கடைகள் இருந்தும் உங்க கடை டேஸ்ட்டு வித்தியாசமா இருக்கே, நீங்க என்ன ஃபார்முலா யூஸ் பண்றீங்கன்னு கேட்குறாங்க. இன்னைக்கு யு-ட்யூப்ல 'ஜிகர்தண்டா செய்வது எப்படி?'னு டைப் பண்ணா வர்ற வீடியோக்கள்ல பயன்படுத்துற அதே பொருள்தான் நாங்களும் பயன்படுத்துறோம். அதே பால், அதே சீனி, அதே பாதாம் பிசின். ஆனாலும் நம்ம கடைக்கு தனி டேஸ்ட்னு மக்கள் சொல்றதை கேட்குறப்போ அதை ஆண்டவன் நமக்குன்னு குடுத்த பரிசா தான் பார்க்குறோம்.''

''விளக்குத்தூண் கடை இன்னும் அதே அளவுல இருக்கே, விரிவுபடுத்துற எண்ணம் இருக்கா?''

''இதே விளக்குத்தூண் கடை வாசல்ல நின்னுதான் எல்லா பிரபலங்களும் ஜிகர்தண்டா சாப்பிட்டிருக்காங்க. முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஐயா வந்தார்னா ரொம்ப பிரியப்பட்டு சாப்பிடுவாரு. நடிகர் எஸ்.வி. சேகருக்கும் நம்ம கடை ஜிகர்தண்டா ரொம்ப இஷ்டம். மதுரைல எங்க ஷூட்டிங் நடந்தாலும் ஜிகர்தண்டா ஆர்டர் எடுத்துட்டு போவாங்க. இப்போ தமிழ்நாட்டுலயே நிறைய இடத்துல புதுசா கிளைகள் தொடங்கிட்டோம். இதை விடப் பெருசாவே ஆரம்பிச்சிருக்கோம். துபாய்ல ஆரம்பிக்க சொல்லியும் கேட்டுக்கிட்டு இருக்காங்க... ஆனா இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் இந்த விளக்குத்தூண் கடை இதே அளவுல தான் இருக்கும். இதை விரிவுபடுத்துற எண்ணம் இல்லை. தெருமுனைக் கடை, எப்போதும் கூட்டம்னு மதுர மக்கள் எல்லோருமே இந்த இடத்தை மதுரைக்கான அடையாளமாத்தான் பார்க்கிறாங்க. அதைத்தான் எங்களுக்கான பெருமையாவும் நினைக்கிறோம்.''