Published:Updated:

மதுரை: நெத்திலி ஃப்ரை, வஞ்சிரம் வறுவல், கறி தோசை, கோலா உருண்டை... ஆனா எல்லாமே வெஜ்! எங்கே, எப்படி?

வெஜ் நெத்திலி வறுவல்
News
வெஜ் நெத்திலி வறுவல்

வழக்கமான சைவ உணவுகளையே பல வெரைட்டிகளில் தயார் செய்யும் இந்த ஹோட்டல்காரர்கள், சமீபகாலமாக அசைவ டிஷ்களை சைவத்தில் செய்து பட்டையை கிளப்புகிறார்கள்.

Published:Updated:

மதுரை: நெத்திலி ஃப்ரை, வஞ்சிரம் வறுவல், கறி தோசை, கோலா உருண்டை... ஆனா எல்லாமே வெஜ்! எங்கே, எப்படி?

வழக்கமான சைவ உணவுகளையே பல வெரைட்டிகளில் தயார் செய்யும் இந்த ஹோட்டல்காரர்கள், சமீபகாலமாக அசைவ டிஷ்களை சைவத்தில் செய்து பட்டையை கிளப்புகிறார்கள்.

வெஜ் நெத்திலி வறுவல்
News
வெஜ் நெத்திலி வறுவல்

சைவ உணவுகளை மட்டும் பாரம்பர்யமாக சாப்பிடுவோரும், அவ்வப்போது சாப்பிடும் சைவப்பிரியர்களும் எதிர்பார்ப்பது புதுப்புது வகையான சைவ உணவுகளைத்தான். ஆனால், அதற்கான தீர்வு வீட்டிலும் இல்லை, வெளியிலும் கிடைப்பதில்லை.

வெஜ் மட்டன் கிரேவி
வெஜ் மட்டன் கிரேவி

வீடுகளிலும், விசேஷங்களிலும், உணவகங்களிலும் வழக்கமான பூரி, பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளும், வடை, பாயாசம், அப்பளம், கூட்டு பொறியலுடன் சாம்பார் சாதமும்தான் சுழற்சி முறையில் கிடைத்து கொண்டிருக்கின்றன.

அசைவ உணவில் மட்டும் பல வெரைட்டிகள் தினம் தினம் உருவாகிக் கொண்டிருக்கும்போது சைவ உணவில் மட்டும் அப்படி இல்லையே என்று ஏங்குவோர்களுக்காகவே மதுரையிலுள்ள டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாகத்தினர் அசைவ உணவுகளே தோற்று விடும் அளவுக்குக் காராசாரமாக புதுப்புது சைவ வெரைட்டிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

வெஜ் வஞ்சிர மீன் வறுவல்
வெஜ் வஞ்சிர மீன் வறுவல்

மாட்டுத்தாவணி உட்பட மதுரையின் பல இடங்களிலும் நான்குவழிச்சாலைகளிலும் அமைந்துள்ள டெம்பிள் சிட்டி ஹோட்டலில் அசைவ உணவு போல விதவிதமாக தயாரிக்கப்பட்ட சைவ உணவுகள் கிடைக்கின்றன.

வெஜ் வஞ்சிர மீன் வறுவல், வெஜ் நெத்திலி ஃப்ரை, வெஜ் மட்டன் கிரேவி, சைவ சிக்கன் கிரேவி, வெஜ் கறி தோசை, வெஜ் கோலா உருண்டை, வெஜ் கபாப், வெஜ் ஆம்லேட் என்று அசைவ வெரைட்டிகள் அனைத்தையும் காய்கறிகள், கிழங்குகள், பழங்களைக் கொண்டே சுவை குறையாமல் வழங்குகிறார்கள். இதுதான் இந்த ஹோட்டலின் தனி சிறப்பு!
வெஜ் நெத்திலி வறுவல்
வெஜ் நெத்திலி வறுவல்

"எனக்கு அசைவம் பிடிக்காது, ஆனால், அதுபோல் சைவத்தில் சாப்பிட வேண்டும்" என்று அடம் பிடிப்பவர்கள் இங்கு வரலாம்.

வழக்கமான சைவ உணவுகளையே பல வெரைட்டிகளில் தயார் செய்யும் இந்த ஹோட்டல்காரர்கள், சமீபகாலமாக அசைவ டிஷ்களை சைவத்தில் செய்து பட்டையை கிளப்புகிறார்கள்.

கொரோனா காலத்தில் மாஸ்க் பரோட்டா, கொரோனா போண்டா, கோவிட் தோசை, நிவர் பயுலின்போது நிவர் பனீர் டிக்கா, வடிவேலு ஊத்தப்பம் என்று நாட்டில் நடக்கும் சென்சேஷனல் விஷயங்களை நினைவுபடுத்தும் வகையிலும் அவ்வப்போது உணவுகளைத் தயாரித்து மக்களைக் கவர்வார்கள்.

இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளியூர் மக்களும் வெஜிடேரியனில் புதுப்புது உணவுகளைத் தேடி இங்கு படையெடுக்கிறார்கள்.

டெம்பிள் சிட்டி ஹோட்டல்
டெம்பிள் சிட்டி ஹோட்டல்

இதைப்பற்றி ஹோட்டல் உரிமையாளர் குமாரிடம் கேட்டோம், "உணவுத் தொழில் வருமானத்துக்கு மட்டும் நடத்துவது கிடையாது. அது ஓர் ஆத்மார்த்தமான சேவை. மக்கள் கொடுக்கிற பணத்துக்குக் குறைவில்லாமல், வயிற்றுக்குப் பிரச்சனை இல்லாமல் வழங்க வேண்டும். சாப்பிட வருபவர் வாடிக்கையாளர்கள் என்று பார்க்காமல் நம் விருந்தாளிகள் என நினைத்து கனிவுடன் உபசரிக்கிறோம்.

டெம்பிள் சிட்டி குமார்
டெம்பிள் சிட்டி குமார்

எங்கள் ஹோட்டலில் தயாரிக்கும் உணவுகளில் செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பதில்லை, வண்ணங்களுக்காக ரசாயணங்களை சேர்ப்பதில்லை. சுத்தமான எண்ணெய் பயன்படுத்துகிறோம்.

முழுக்க வீட்டுப் பக்குவத்தில் மசாலா பொருள்களைத் தயார் செய்கிறோம். எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் தயார் செய்த காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

அசைவ உணவுகளை சைவ முறையிலும் தயாரிக்காலாம் என்று என் குடும்பத்தினரும், ஹோட்டலில் பணியாற்றும் சமையல் கலைஞர்களும் பரிட்சித்துப் பார்த்து அது சிறப்பாக வந்தால் மக்களுக்கு வழங்குகிறோம். முதலில் சைவ உணவுகளில் புதுப்புது வெரைட்டிகளை உருவாக்கிய நாங்கள், மக்களால் அதிகம் விரும்பப்படும் அசைவ டிஷ்களை அப்படியே சைவத்தில் உருவாக்கி மக்கள் அந்த உணவுகளை தேடி வரும் வகையில் சாதனை படைத்திருக்கிறோம். இன்னும் பல அசைவ உணவுகளை சைவத்தில் படைப்போம், மதுரைக்கு நெடுஞ்சாலை வழியாக எந்தப் பக்கம் வந்தாலும் அங்கு எங்கள் உணவகம் உள்ளது" என்றார்.

டெம்பிள் சிட்டி வெரைட்டி டிஷ்
டெம்பிள் சிட்டி வெரைட்டி டிஷ்
அப்புறம் என்ன, மதுரை வருகிற மக்களே வித்தியாசமான சைவ அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்டுங்க!