Published:Updated:

மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன் கவனிக்கவும்! #MyVikatan

Medicine
News
Medicine

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி. ஆல்கஹால், மாத்திரைகளின் செயல்திறனைக் குறைத்து விடுகிறது. மேலும், உடலில் உள்ள நோய்கள் குணமாவது தடைப்பட்டு, அந்தப் பிரச்னையை நீண்ட நாட்கள் நம் உடலிலேயே வைத்துக்கொள்ள நேரிடும்.

உடல்நிலையைத் தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும்போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும்.

ஆல்கஹால்

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி. ஆல்கஹால், மாத்திரைகளின் செயல்திறனைக் குறைத்து விடுகிறது. மேலும், உடலில் உள்ள நோய்கள் குணமாவது தடைப்பட்டு, அந்தப் பிரச்னையை நீண்ட நாட்கள் நம் உடலிலேயே வைத்துக்கொள்ள நேரிடும். விரைவில் நோய் சரியாக வேண்டுமென்றால், ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

medicine
medicine

அமிலத்தன்மை உள்ள உணவுகள்

அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேபோல இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலைத் தடுத்து விடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்து விடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

ஹெவி ஃபுட்

மாத்திரைகளைச் சாப்பிடும்போது வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால்தான், உடல் நிலை விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளைச் சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவை மருந்துகளின் சக்தியைக் குறைத்து, பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி விடும். அதனால்தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும்போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்கச் சொல்கிறார்கள். ஏன், சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள்

ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. மேலும், பால் பொருட்களைப் போல் இவையும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்