Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...

ங்கள் தோட்டத்தில் விளைந்த கறிகாய்கள், பூக்கள் முதலியவற்றைப் பறிக்கும்போது கையால் பறித்தால், புழு பூச்சி தாக்கலாம். அத்துடன் காய்களும் மலர்களும் கசங்கிவிடும். ஒரு சிறிய கத்தரிக்கோல் உபயோகித்து காய்களையும் பூக்களையும் கத்தரித்து எடுத்தால், பாதுகாப்பாக இருக்கும்.

- ஆர்.அஜிதா, கம்பம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பக்குழியில் உண்ணி அப்பம், பணியாரம் முதலியவற்றை செய்யும்போது, எண்ணெயை மிக மிகக் குறைவாக உபயோகிக்க விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ஸ்.... முதலில் குழிகளில்  எண்ணெயைத் தடவிவிட்டு, மாவை முக்கால் பகுதிக்கு ஊற்றுங்கள். அப்பக்குழியை, மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடுங்கள். அப்பங்கள் ஒரு பக்கம் வெந்து உப்பி வரும். மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் மூடி வேகவிட்டு எடுத்தால், அப்பங்கள் தயார் (நான்ஸ்டிக் அப்பக்குழியானால் மிகவும் நல்லது).

                                                                                                                                          உஷா ராஜகோபாலன், செகந்திராபாத்

டிப்ஸ்... டிப்ஸ்...

மாலையில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யலாமே’ என்று நினைக்கிறீர்களா? காலையில் குக்கரில் கால்  டம்ளர் கடலைப்பருப்பையும், கால் டம்ளர் பயத்தம்பருப்பையும் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். மாலையில் பலகாரம் செய்யும்போது, பருப்புகளை நன்கு மசித்துக்கொண்டு, அத்துடன் ஒன்றரை டம்ளர் அரிசி மாவு, தேவையான உப்பு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளுங்கள். இதை முள்ளுத் தேன்குழலாகப் பிழிந்தால், 'குயிக் முறுக்கு' ரெடி!

                                                                                                                                                    என்.ஜெயலட்சுமி, திருவான்மியூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

ண்ணாடி டம்ளர்கள்,  பீங்கான் கப், எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றின் உள்ளே கறை படிந்திருந்தால் பளிச்சென்று மாற்ற இதோ ஓர் அருமையான யோசனை... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழியுங்கள். இந்த நீரை கறை படிந்த பாத்திரங்களில் நிரப்பி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு தேய்த்தால், பாத்திரங்களில் இருந்த கறைகள் முழுவதும் காணாமல் போயிருக்கும்.

                                                                                                                                                         எஸ்.ராதிகா ரவி, ஊரப்பாக்கம்

டிப்ஸ்... டிப்ஸ்...

யிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் இல்லையா? இரண்டு மூன்று பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய்த் துண்டுகளை நன்கு வதக்குங்கள். கூடவே உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள் (குறைந்த தீயில்  வதக்கினால் மிளகாய்  நெடி அடிக்காமல் இருக்கும்). வதக்கியதும், அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கலந்துவிட்டால் ஊறுகாய் தயார்.  மிளகாய் காரம் அதிகமாக  இருந்தால் சிறிதளவு சர்க்கரை சேர்க்கலாம். இந்த ஊறுகாயை அளவாகப் பரிமாறவும்,.

                                                                                                                                                                                   எஸ்.ராஜம், சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

யணம் முடிந்து வீடு திரும்பியதும், பயணப் பெட்டிகளை நன்கு துடைத்து, பெட்டிகளின் ஜிப்களின் மீது ஒரு மெழுகுவத்தி கொண்டு தேய்த்துவிட்டு பிறகு எடுத்து வையுங்கள். அடுத்த முறை உபயோகிக்க எடுக்கும்போது ஜிப் சுலபமாகத் திறக்க வரும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

                                                                                                                                                                   -சீனு.சந்திரா, சென்னை -4

பூரி உப்பலாக வர ஒரு யோசனை...  சாதம் வடித்த கஞ்சியில் மாவைப் பிசைந்து பூரி திரட்டுங்கள். கஞ்சி இல்லை யென்றால், ஒரு ஸ்பூன் அரிசி மாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டால் கஞ்சியாகிவிடும் இதில் மாவைப் பிசைந்து, பூரி தயாரித் தால் நன்கு உப்பி வரும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- கௌசியா அஜீஸ், நெய்வேலி

சிலர் தேங்காயைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் துருவல் போல் அரைத்துக்கொள்வார்கள். சில சமயம் அவை சீராக மசியாது. தேங்காய்த் துண்டுகளை வெறும் வாணலியில் அரை நிமிடம் வதக்கினால், அவற்றில் உள்ள ஈரப்பதம் காய்ந்துவிடும். இப்போது மிக்ஸியில் சில சுற்றுகள் சுற்றினால், பூப்பூவான தேங்காய்த் துருவல் தயார்.

- வி.தேவகி, அடையாறு

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்