ஒவ்வொன்றுக்கும் பரிசு: ' 100

வடைக்கு உளுந்து ஊறவைக்கும்போதே, வேறொரு கிண்ணத்தில் அரிசியையும் ஊறவையுங்கள் (ஒரு ஆழாக்கு உளுந்துக்கு ஒரு பிடி அரிசி என்ற அளவில்). உளுந்தை பாதி அரைத்ததும் அதில் ஊறிய அரிசியைப் போட்டு மேலும் நைஸாக அரையுங்கள். வடைகள் மொறுமொறுப்பாக ருசியாக இருக்கும். ஆனால், தயிர் வடைக்கு அரிசி சேர்த்து அரைக்க வேண்டாம்.

- ஜி.நீலா, அபிராமபுரம்

இஞ்சியின் மேல் தோலை நீக்கிவிட்டுத்தான் சமைக்க வேண்டும். ஆனால், இஞ்சி வளைந்து நெளிந்து இருப்பதால், தோலை நீக்க சிரமமாக இருக்கலாம். கேரட் துருவியின் சிறிய துளையுள்ள பக்கம் இஞ்சியை லேசாகத் துருவினால், தோல் பாகம் உதிர்ந்துவிடும். பிறகு துண்டு போடுவது சுலபமே!

- அலமேலு நாகராஜன், சென்னை-33

குழந்தைகள் உபயோகிக்கும் ரப்பர் கறுத்து அழுக்காகிவிட்டதா? அதை உப்புக் காகிதத்தில் தேய்த்தால், ரப்பர் பளிச் என்று ஆகிவிடும்.

- எஸ்.ராஜம், சேலம்

வாசகிகளின் டிப்ஸ்களை தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

வாரம் ஒருமுறை 2 அல்லது மூன்று டேபிள்ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ( சுமார் 2 நிமிடங்கள்) சற்று ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், கிரேவி என்று உணவுகளைத் தயாரித்து முடித்ததும், மேலே இந்த சீரகப் பொடியைத் தூவிவிட்டால்... சுவையும் மணமும் அருமையாக இருக்கும். வேறு தாளிப்பு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல, தனியாவையும் (மல்லி) வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு... சாம்பார், கத்திரிக்காய் பொரியல் போன்றவற்றின் மேலே தூவினால் ருசி கூடும்.

வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்

குழந்தைகளும் சிறுவர், சிறுமியரும் உள்ள வீடுகளில் மின் இணைப்புகளில் கூடுதல் கவனம் தேவை. மொபைல் போன், ஐ பேட் போன்றவற்றை சார்ஜ் செய்து முடித்ததும், அதற்குப் பக்கத்திலிருக்கும் ஸ்விட்சையும் அணைத்துவிட வேண்டும். சார்ஜரில் உள்ள வொயர்களில் மின்சாரம் பாய்ந்துகொண்டே இருக்கும். அதே போல், கொசு அடிக்கும் மட்டைகளை எப்போதும் 'ஆஃப்’ நிலையில் வைத்திருந்து, தேவையானபோது மட்டும் ஆன் செய்து கொசுக்களை விரட்ட வேண்டும். எப்போதும் 'ஆன்’ நிலையில் இருந்தால் நடுவில் உள்ள வலை போன்ற பகுதியைக் குழந்தைகள் தொட்டுவிட்டால் அபாயம்தான். மிக்ஸி, கிரைண்டரில் அரைத்து முடித்ததும், இதே போல் மேலே உள்ள ஸ்விட்சுகளையும் அணைத்துவிட வேண்டும்.

மைதிலி ராஜாமணி, வில்லிவாக்கம்

தினமும் காலையில் குக்கரில் இரண்டு, மூன்று கேரட்டுகளை வேகவைத்துக்கொள்ளவும். கேரட்டை பலவித காய்களுடன் எளிதாக சேர்க்கலாம் (பீன்ஸ், கோஸ், குடமிளகாய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பட்டாணி முதலியவை). கூட்டு, பொரியல், புலாவ், கட்லெட் ஆகியவற்றை விரைவில் தயாரிக்க வெந்த கேரட் கைகொடுக்கும். அத்துடன் சர்க்கரை சேர்த்து அல்வா தயாரிக்கலாம். மேலும், சர்க்கரையும், குளிர்ந்த பாலும் சேர்த்து சில நிமிடங்களில் பாயசம் தயாரிக்கலாம். இதில் ஒன்றிரண்டு சொட்டு பாதாம் எசன்ஸ் விட்டால், பாதாம் கீர் போலவே ருசிக்கும்.

எஸ்.லக்ஷ்மி, தி. நகர்

சில குழந்தைகள் பிரவுன் பிரெட் சாப்பிட மறுப்பார்கள். என்ன செய்வது? கடலை மாவு அல்லது சோள மாவை பஜ்ஜி மாவு போல கரைத்துக்கொள்ளுங்கள். பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி, இந்த மாவில் தோய்த்து, எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுத்து... அடுத்த பக்கம் திருப்பிப் போட்டு சுட்டால்... அருமையான பிரெட் கட்லெட் தயார். 'தக்காளி கெட்சப்’புடன் பரிமாறினால்... குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்

கே.விஜயலட்சுமி, ஏந்தல்