Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ’100

டிப்ஸ்... டிப்ஸ்...

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ஒரு கப், வெங்காயம் ஒரு கப், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தலா ஒரு ஸ்பூன்... இவற்றுடன் ஒரு கப் கடலை மாவு, கொஞ்சம் அரிசி மாவு, உப்பு கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து, பக்கோடா தயாரித்தால், அருமையாக இருக்கும்.

- நளினி  சுந்தரராஜன், பள்ளிக்கரணை

டிப்ஸ்... டிப்ஸ்...

புதிய எண்ணெயைப் பாத்திரத்தில் நிரப்பும் முன், பாத்திரத்தை நன்கு கழுவி ஈரமில்லாமல் காயவைத்து, பிறகு நிரப்புங்கள். இல்லையெனில் பழைய எண்ணெயின் கசடு, புதிய எண்ணெயில் கலந்து, மணம், ருசி இரண்டையும் கெடுத்துவிடும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்...

வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் விளக்கு ஏற்றும்போது, திரியில் பச்சைக் கற்பூரத்தைத் தடவிவிட்டு, அத்துடன் எண்ணெயிலும் ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரத்தைக் கலந்துவிட்டால் வீடு முழுவதும் மணக்கும்.  

- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.

வாசகிகளின்  டிப்ஸ்களை தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

டிப்ஸ்... டிப்ஸ்...

தக்காளி சாஸ் தீர்ந்து விட்டதா? நான்கைந்து தக்காளிப் பழங்களை வெந்நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து, தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி, அரை ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்தால்... திடீர் தக்காளி சாஸ் ரெடி.

- பத்மா வெங்கட்ராமன், ரெட்டிப்பாளையம்

டிப்ஸ்... டிப்ஸ்...

திடீர் குல்ஃபி செய்து குழந்தைகளை அசத்தலாமா? ஒரு கப் இனிப்பில்லாத கோவா (இனிப்பு பால்கோவா என்றால் சர்க்கரையைக் குறைத்துக்கொள்ளவும்), ஒரு கப் பால், முக்கால் கப் சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு இரண்டு மூன்று சுற்று சுற்றி, இட்லி மாவு பதத்துக்கு எடுத்துக்கொள்ளவும். இதில் முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து ஃப்ரீஸரில் வைத்தால் கொஞ்ச நேரத்தில் குல்ஃபி ரெடி (சின்னச் சின்ன கிண்ணங்களில் நிரப்பி வைத்தால் விரைவில் உறைந்துவிடும்).

- சரோஜா ஸ்ரீனிவாசன், மும்பை

டிப்ஸ்... டிப்ஸ்...

மங்கலாக இருக்கும் வைர நகைகளை (கம்மல், மூக்குத்தி, மோதிரம் போன்றவை), மென்தால் கலந்த டூத் பேஸ்ட் கொண்டு துடைத்தால், பளிச் சென்று ஆகிவிடும்.

- அனிதா ராமச்சந்திரன்,  பெங்களூரு

டிப்ஸ்... டிப்ஸ்...

சமையலில் வெங்காயத்தை சேர்க்கும்போது, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டவுடன், சிறிது உப்பு சேர்த்து வதக்கினால், சீக்கிரம் வெங்காயம் வதங்கி விடும். அதோடு வெங்காயம் இனிப்பாக இல்லாமல், உப்பின் சுவை சேர்ந்து ருசியாக இருக்கும்.


- ஆர்.பிருந்தா ரமணி, சென்னை-41

டிப்ஸ்... டிப்ஸ்...

பாகற்காய் குழம்பு வைக்கும்போது, அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டால்... குழம்பில் கசப்பு மிகவும் குறையும்.


- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

கோடையில் சிறிது நேரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டும். அதனால் உடலில் அரிப்பு ஏற்படும். வெங்காயத்தை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொண்டால், உடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

- செல்வ மேகலா, பந்தநல்லூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

குழம்பு, சூப் செய்யும்போது நீர்த்துவிட்டால், திக்காக வருவதற்கு சோள மாவு அல்லது மைதா மாவை கரைத்து ஊற்றுவோம். அதற்குப் பதிலாக ஓட்ஸை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து பொடி செய்தோ அல்லது தண்ணீர் ஊற்றி அரைத்தோ குழம்பு, சூப் கொதிக்கும்போது சேர்த்துக் கொதிக்க வைத்தால்... ருசியும் மாறாது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.


- ஆர்.ராமாத்தாள், வேளச்சேரி

பூசணிக்காய் அல்வா செய்வதற்கு முன்பு பூசணிக்காயின் மேலுள்ள தோலை சீவிவிட்டு, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, பிறகு அதைத் துருவினால் ஒரே சீராக வரும். அல்வா கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை

டிப்ஸ்... டிப்ஸ்...

அதிரசம் செய்த பின் கெட்டியாக இருந்தால், இட்லி குக்கரில் வைத்து ஆவியில் லேசாக வேகவைத்து எடுத்தால், அதிரசம் மென்மையாகிவிடும்.


- கே.பிரபாவதி, கன்னியாகுமரி

அடுத்த கட்டுரைக்கு