Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200

Published:Updated:

ஃப்ரூட் போண்டா, பணியாரம்

தேவையானவை: நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி - தலா அரை கப், முந்திரி, பாதாம், பிஸ்தா (சேர்த்து) - அரை கப், தேன் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மைதா - ஒரு கப், பாதாம் பவுடர் (பாதாம் டிரிங்க் மிக்ஸ்) - கால் கப்,  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

வாசகிகள் கைமணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: மைதா, ஏலக்காய்தூள், பாதாம் பவுடர், உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பழக் கலவையை சின்னதாக உருட்டிப் போட்டு பொரிக்கவும். பரிமாறும் முன்பு மேலே சிறிதளவு தேன் ஊற்றி சாப்பிடக் கொடுக்கவும்.

குழிப்பணியாரக் கல்லில் கலவையை ஊற்றி பணியாரமாக வும் செய்யலாம்.

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

காலிஃப்ளவர் - கடலை மாவு தோசை

தேவையானவை: காலிஃப்ளவர் -  ஒரு கப் (ஒரு பெரிய பூக்களாக எடுத்தது), பொட்டுக்கடலை மாவு - அரை கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு போட்டு இறக்கி வைத்து, காலிஃப்ளவர் பூக்களை போட்டு மூடி வைத்து, பிறகு தண்ணீரை வடித்து துருவிக்கொள்ளவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மிளகுதூள், உப்பு,  சேர்த்துக் கலந்து, தேவையான நீர் விட்டுக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசையாக ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

- பி.ஆனந்தி, சென்னை-42

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism