Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

Published:Updated:

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

ஐந்து இலை குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) - ஒரு கப், புளி - சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்

செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். அத்துடன் மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்து... புளி, உப்பு சேர்த்து மிக்ஸி யில் அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.

இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்

பைனாப்பிள் ஃப்ரைடு ஸ்வீட்

தேவையானவை: நீளவாக்கிலோ, அரை வட்டமாகவோ கட் செய்த பைனாப்பிள் துண்டுகள் - 10, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கொப்பரைத்துருவல் - 2 டீஸ்பூன்,பாதாம், முந்திரி துருவல் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு.

வாசகிகள் கைமணம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, கம்பி பதத்தில் பாகு தயாரித்து, அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண் ணெயைக் காயவைக்கவும். மாவில் பைனாப்பிள் துண்டுகளைத் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து தட்டில் வைக்கவும். கொப்பரைத் துருவல், விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி துருவல் தூவி பரிமாறவும்.

- ஜி.ஷீலா, மாதவரம்

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism