Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

டிப்ஸ்... டிப்ஸ்...

ண்ணெய்ப் பாத்திரங்களைத் தேய்க்கும்போது, முதலில் அவற்றை டிஷ்யூ பேப்பரால் அழுந்த துடைத்துவிட்டு, பிறகு தேய்த்தால்... எளிதாகத் துலக்கிவிடலாம். தண்ணீரும் குறைவாக செலவாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பிரபா ரவிசங்கர், புனே

டிப்ஸ்... டிப்ஸ்...

குக்கரில் உள்ள கேஸ்கட்டை உபயோகிக்கும் நேரம் போக, மற்ற நேரத்தில் நீர் நிரம்பிய தொட்டிகளில் கிடக்கும்படி செய்தால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

- எஸ்.தமிழரசி, அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

டுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், ‘சிங்க்’ அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.

- எஸ்.ராஜம், சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில் மண் வைத்து, அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்ததும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்...

திரசம் உதிர்ந்து போகிறதா..? மாவில் கொதிக்கும் பாலை ஊற்றி மூடுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, நன்கு கிளறி, எண்ணெயைக் கையில் தொட்டு, மாவைத் தட்டுங்கள். மிருதுவான, மிக ருசியான, உடையாத அதிரசம் தயார்!

- எஸ்.நவீனா தாமு, பொன்னேரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism