Published:Updated:

வெஜிடபிள் டிப்ஸ்

வெஜிடபிள் டிப்ஸ்

வெஜிடபிள் டிப்ஸ்

வெஜிடபிள் டிப்ஸ்

Published:Updated:

ஒரேயடியாக சமைக்காதீங்க!

ரண்டு, மூன்று வேளைகளுக்குச் சேர்த்துச் சமைத்து, சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி சூடு செய்வதால், உணவின் சத்து நீங்கும் என்பதுடன், சமைத்த உணவை அதிக நேரம் வைக்கும்போது கிருமிகள் வளரும் வாய்ப்பிருக்கிறது.

முன்கூட்டியே நறுக்க வேண்டாமே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலர் மறுதின சமையலுக்கான காய்களை, முன் தினமே தயாராக (தேவையான சைஸில்) நறுக்கி வைத்துவிடுவார்கள். இது காய்கறிகளின் சத்துக்களை இழக்கச் செய்து தன்மையை மாற்றிவிடும். இந்தப் பழக்கத்தை தவிர்க்க முடியாதவர்கள், காய்களை தோல் சீவி, பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி, காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். மறுநாள் தேவையான சைஸில் நறுக்கி பயன்படுத்தலாம்.

கவனமாக வேகவிடுங்க!

வேகமாக சமைப்பதாக நினைத்து அதிகப்படியான தீயில் வைத்து காய்கறிகளைச் சமைத்தால், காய்களில் உள்ள சத்துகள் வீணாகும். அதேபோல அளவுக்கு அதிகமான தண்ணீரை ஊற்றி வேக வைப்பதும், காய் மாவாகும் வரை நீடித்த நேரத்துக்கு வேகவைப்பதும் கூடாது.

சத்துக்களைக் கரையவிடாதீர்!

னைத்துவிதமான காய்களிலும் தண்ணீரில் கரையும் சத்துக்கள், காற்றில் கரையும் சத்துக்கள் என்று இருக்கின்றன. எனவே, காய்களை நறுக்கிய பின் கழுவக் கூடாது. அதேபோல, நறுக்கிய பின் சமைக்க நீண்ட நேரம் எடுத்தால் சத்துகள் காற்றில் கரைந்துவிடும் என்பதால், உடனடியாகச் சமைத்துவிட வேண்டும்.

தோல்தான் பிரதானம்!

பெரும்பாலான காய்கறிகளின் தோல்களில்தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதால் பலரும் காய்களின் தோல் நீக்கி சமைக்கின்றனர். இதனால் அதில் உள்ள விட்டமின், மினரல் சத்துகள் வீணாகின்றன. இதைத் தவிர்க்க, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து, காய்களைக் நன்றாகக் கழுவிஎடுத்துவிட்டால், பூச்சிக்கொல்லி மருந்தின் படிதல்கள் நீரில் கரைந்துவிடும். பிறகு, நன்றாகத் துடைத்துவிட்டு காயின்
தோலுடனே சமைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism