Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...

• கடலை மாவு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து கூழாக்கி, அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு, பிறகு நன்கு கழுவிவந்தால்... முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம்.

 - நா.பாப்பா, திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

• தோசைக்கு ஊறவைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால்... தோசை மொறுமொறுப்பாக வருவதுடன், நல்ல வாசனையாகவும் இருக்கும்.

விஜயா சீனிவாசன், திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

• சீரகம், ஓமம், மிளகு இவற்றை வறுத்து... பெருங்காயம், சுக்கு சேர்த்துப் பொடி செய்யவும். எந்த சுண்டலாக இருந்தாலும், இறக்குவதற்கு முன் இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவிக் கிளறி பயன்படுத்தினால், வாயுக் கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கும்.

- என்.கோமதி, திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

கேரட் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், ரத்தசோகை நீங்கும்; ரத்தம் விருத்தியடையும்.

- ஜைனப்பி ஹாஷிம், உளுந்தூர்பேட்டை

டிப்ஸ்... டிப்ஸ்...

ந்தக் கிழங்காக இருந்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து, பிறகு எடுத்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

- ஆர்.அம்பிகா, சென்னை-41

டிப்ஸ்... டிப்ஸ்...

லிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் விரல்களைச் சிறிதுநேரம் வைத்திருந்தால், நகம் உடையாமலிருக்கும்.

- ஆர்.அம்மணி, வடுகப்பட்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

வேப்பிலை, கறிவேப்பிலையை சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அந்த நீரைக் கொண்டு தலையை அலசினால். பேன் இருக்காது: முடி கருமையாகும்; முடி உதிர்தலைத் தடுக்கும்.

- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பாத்தி மிகுந்துவிட்டால், அதை மிக்ஸியில் பூப்போல அரைத்து... சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறுங்கள். குழந்தைகள் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்டு, விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- ஆர்.அஜிதா, கம்பம்

டிப்ஸ்... டிப்ஸ்...

வெள்ளைப் பூண்டை அரைத்து, பூச்சி, வண்டு கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால்... வீக்கம், வலி குறையும்.

- எஃப்.ஜெஹராபீ, ஜெயங்கொண்டம்

டிப்ஸ்... டிப்ஸ்...

தேநீர் தயாரிக்கும்போது துளசி இலைகளைச் சேர்த்தால், தேநீர் மணமாக இருக்கும்; ஜலதோஷத்தில் இருந்தும் காக்கும்.

- சே.தமிழரசி, சென்னை-58