Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

Published:Updated:

பொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு ரவையை வறுத்து பொங்கலோடு சேர்த்து கிளறினால், பொங்கல் கெட்டியாகிவிடும். ருசி கூடுமே தவிர குறையாது!

டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- டி.இந்திரலட்சுமி, சென்னை

ழை, பனிக்காலங் களில் பொரித்த அப்பளம், வற்றல், வடகம் விரைவில் நமர்த்துவிடும். இவற்றை டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், இரண்டு நாட்களானாலும் மொறுமொறுப்புடன் இருக்கும். இதே போன்று பிஸ்கட்டையும் அந்த கவருடனேயே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சீக்கிரம் நமர்த்துப் போகாது.

- நா.செண்பகா, திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

ழைக்காலத்தில் தயிர் தோய்வது சிரமம். குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி, வெளியே ஊற்றிவிடவும். பாலை சற்று மிதமான சூட்டில் பாத்திரத்தில் ஊற்றி, கொஞ்சம் தயிரை விட்டுக் கலக்கவும். காய்ந்த மிளகாயின் காம்பை அதில் போடவும். இந்தப் பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி வெயிட் போடவும். காலையில் புளிப்பில்லாத, கெட்டியான தயிர் கிடைக்கும்.

- டி.ஜெயலட்சுமி, விழுப்புரம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக குடிக்கிற சோடாவை ஊற்றிப் பிசைந்தால்... பரோட்டா/நாண் மிருதுவாக, பஞ்சுபோல் மெத்து மெத்தென்று வரும் 

டிப்ஸ்... டிப்ஸ்...

- புனிதவதி சியாம், கோவை

நிலைக் கண்ணாடியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்ட இடங்களில் பிசுபிசுப்பு உள்ளதா..? டீ வடிகட்டிய பின் மிஞ்சும் தூளை ஒரு துணியில் கட்டி துடைத்தால் ‘பளிச்’சென ஆகிவிடும்.

- என்.ஜீவிதா, தஞ்சாவூர்

ப்பாத்திக்கு மாவு பிசையும்போது அத்துடன் சூடான பால், வாழைப்பழம் சேர்த்தால் மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

-பி.ரமணி, சேலம்

குக்கருக்குள் வைத்து சமைப்பதற் கென்று பிரத்யேக அலுமினிய பாத்திரங் கள், குக்கருடன் சேர்த்தே தரப் படுவதுண்டு. இவற்றை பெரும்பாலும் உபயோகப்படுத்துவதில்லை பலரும். இத்தகைய பாத்திரங்களை கடையில் கொடுத்தால் சீராக துளை போட்டுக் கொடுப்பார்கள் அதனை காய்கறி வடிதட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- வத்சலா சதாசிவன், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism