
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100ஐடியா
ஒல்லியான பெண்கள், பாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால்.. உடலில் சதைபோடும்.

- செல்வி.மேகலா, பந்தநல்லூர்
தேங்காயை உடைத்த தும், கண் உள்ள பாகத்தை முதலில் உபயோகித்துவிட வேண்டும். ஏனெனில், அந்தப் பகுதிதான் விரைவில் கெட்டுப்போகும்.
- எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி
பெண்கள் சிலருக்கு அரும்பு மீசை இருக்கும். அவர்கள் குப்பைமேனி இலை, வேப்பிலை, விரலி மஞ்சள் மூன்றையும் கலந்து அரைத்து, மீசை உள்ள இடத்தில் தடவி வந்தால்... மீசை காணாமல் போய்விடும்.
- க.கலா, காகிதப்பட்டறை
பச்சை மிளகாயை நறுக்கினால், நீண்ட நேரத்துக்கு கை எரிச்சலாக உள்ளதா? அதை நறுக்கும் முன், கைகளில் தேங்காய் எண்ணெய் அல்லது புளிக்கரைசலை சிறிதளவு தடவிக்கொண்டால்... எரிச்சல் ஏற்படாது.

- எஸ்.சிநேகா, சென்னை-23
கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன், சுவையும் அதிகரிக்கும்.

- ஜி.ஜெயலட்சுமி, சிட்லபாக்கம்.
மெழுகுவத் தியை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால், அதிக நேரத்துக்கு எரியும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்
`ஏபிசி’ ஜூஸ் (ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்து செய்த ஜூஸ்) அடிக்கடி பருகி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளின் தாக்கம் மட்டுப்படும்.

- தாரா, கோயம்புத்தூர்
வாழைத்தண்டு சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை குறையும்.
- ம.ஜெயலட்சுமி, வந்தவாசி

தேங்காய் பர்ஃபி செய்யும்போது, கலவையில் ராகிமால்ட் 2 டீஸ்பூன் சேர்த்தால், கமகமவென்றும், சூப்பர் சுவையிலும் இருக்கும்.

- வே.ராமலக்ஷ்மி, திருநெல்வேலி
கீரைக்கூட்டுக்கு தேங்காயை அரைத்து விடுவதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால், மேலும் பிரமாதமான ருசியில் இருக்கும்.
- விஜயாராம், பெரம்பூர்
பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அரைத்து அடை வார்த்தால், மேலும் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

- வி.ஸ்ரீவித்யா, நங்கநல்லூர்