Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ட்டுக்கு பூந்தி தயாரிக்கும்போது, கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவையும் கலந்துகொண்டால், பூந்தி முத்து முத்தாக வரும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- பிரேமலதா மகாதேவன், பெரியகுளம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ல்யாண முருங்கை இலையை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக்கொண்டால்... சளி, கபம் நீங்க உதவும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை

டை மாவு நீர்த்துவிட்டால், சிறிதளவு கார்ன்ஃப்ளேக்ஸ் தூள் கலந்து வார்த்தால், சுவையான, மிருதுவான அடை ரெடி.

டிப்ஸ்... டிப்ஸ்...

- வி.ஜானகி, சென்னை-78

ருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேகவைத்து, தோலுரித்து, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து... ஃப்ரெஷ் தயிர் சேர்த்துக் கலக்கினால், ருசிமிக்க பச்சடி தயார்.

டிப்ஸ்... டிப்ஸ்...

-ராஜேஸ்வரி, வெற்றி நகர்

ளநீரை கண் மட்டும் திறந்து அரை டீஸ்பூன் சர்க்கரை போட்டு மூடி வைத்து விட்டு, மறுநாள் ஆப்பம் செய்யும்போது மாவில் கலந்து, ஆப்பம் தயாரித்தால்... நல்ல டேஸ்ட்டில் மிருதுவான, சுவையான ஆப்பம் ரெடி! குழிப்பணியாரம் செய்யும்போதும் இதே போல் செய்யலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி

சோயா உருண்டை களைச் சமையலில் பயன் படுத்தும்போது முதலில் தேவையான தண்ணீரில் ஒரு கரண்டி பாலை விட்டுக் கொதிக்கவைத்து, அதில் இந்த உருண்டைகளைப் போட்டு, 10 நிமிடம் கழித்து எடுத்துக் கையால் நீரை ஒட்டப் பிழிந்து பயன்படுத்தினால்.. சோயா வாசனை வராது.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.எஸ்.லக்ஷ்மி, பெங்களூரு

கொள்ளுடன் சுரைக்காய் 2 துண்டு சேர்த்து குக்கரில் வேகவைத்து, அந்த நீரை வடிகட்டி, அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடித்துவந்தால்.. உடல் எடை குறையும். அந்தக் கொள்ளு, சுரைக்காயை சிறிதளவு காரம், உப்பு சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.கே.பிரேமிகா, பெரம்பூர்

குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து பாதாம்பருப்பை சேர்த்து அரைத்தால், சத்து அதிகரிக்கும். அத்துடன் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- லாவண்யா, கரூர்

டகக்கூழில் கேரட், பீட்ரூட் சாறு, தக்காளிச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைச் சாறு போன்றவற்றை சேர்த்தால் வண்ண வண்ண வடகங்கள் தயார். இது உடலுக்கும் நல்லது.

டிப்ஸ்... டிப்ஸ்...

எஸ்.ராஜம், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism