Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

சீனி சேர்த்தால்... ஹோட்டல் பூரி!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ .100

பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைக்கும்போது, நெய்யில் கத்திரிக்காயை தனியாக வதக்கி, குழம்பு கொதிக்கும்போது சேர்த்தால்... சுவையும் மணமும் அதிகமாக கிடைக்கும்.

- வி.பாக்கியலட்சுமி, மதுராந்தகம்

டிப்ஸ்... டிப்ஸ்...

கோடை காலத்தில் புதினாவை அவ்வப்போது உபயோகித்தால், உடலுக் குக் குளிர்ச்சியை தரும்; வயிற்றுவலி, உடல்வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் புதினாவுக்கு உண்டு.

- மஹிதாரா, கோயம்புத்தூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது அரிசி மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் கலந்து, வேகவைத்த கிழங்கை அந்தக் கலவையில் நன்றாகக் கலந்து, எண்ணெயில் வதக்கினால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

- பிரேமா சாந்தாராம், சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் ரவையையும், ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துப் பிசைந்தால்... ஹோட்டல் பூரி மாதிரி அழகாக வரும்.

- பத்மா வெங்கட்ராமன், அரியலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

பால் பவுடர், டிரை தேங்காய்த் துருவல் (டெஸிகேட்டட் கோகனட். டிபார்ட்மென்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்), சர்க்கரைத்தூள், முந்திரிப் பொடி எல்லாவற்றையும் ஒரே அளவு எடுத்து நன்கு பிசைந்து, நெய் தடவிய தட்டில் பரப்பி, ஃப்ரீசரில் வைத்து எடுத்து துண்டுகளாக்கினால்... இன்ஸ்டன்ட் பர்ஃபி ரெடி!

- செ.கலைவாணி, மேட்டூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

மாவடு ஊறுகாய் போடும் காலம் இது. காம்புள்ள மாவடுகளை வாங்கி ஊறுகாய் போடும்போது, காம்புகளை ஒட்ட வெட்டிவிடாதீர்கள். மாவடுவுடன் சிறிது காம்பு இருக்குமாறு விட்டுவிட்டு நறுக்கவும். சிறிது காம்புடன் கூடிய மாவடு ஊறுகாய் நீண்ட நாட்கள் ‘வெடுக்’கென்று நன்றாக இருக்கும்.

- சியாமளா ராஜகோபால், சிட்லபாக்கம்

டிப்ஸ்... டிப்ஸ்...

பேரீச்சம்பழத்தை இரண்டு மணி நேரம் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- ஆர்.கீதா, கேரள

டிப்ஸ்... டிப்ஸ்...

கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டு கிளறினால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

- எஸ்.தமிழரசி, அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து, பஜ்ஜி மாவில் சேர்த்துக் கலந்து பஜ்ஜி செய்தால், மணமும் சுவையும் அருமையாக இருக்கும்.

- லலிதா நாகராஜன், தென் எலப்பாக்கம

டிப்ஸ்... டிப்ஸ்...

கீரையை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் அலசியபின் சமைத்தால், நிறம் மாறாது; ரசாயனம் தெளிக்கப்பட்டிருந்தாலும், அதன் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கும்.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு