எலுமிச்சம்பழத் தோலை வெயிலில் காயவைத்து பவுடராக்கி, பாத்திரம் தேய்க்கும் பவுடருடன் கலந்து பாத்திரங்களைத் தேய்த்தால், அவை பளபளக்கும். எலுமிச்சைத் தோல் பவுடரை கடலை மாவுடன் கலந்து குளித்தால், தோல் மினுமினுக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி

கேரளா ஸ்பெஷல் அப்பளம் செய்யலாமா..? பலாமுசுவை (பிஞ்சு பலாக்காய்) தோல் சீவி, துண்டுகளாக்கி வேகவிட்டு... தேவையான அளவு காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, எள் சேர்க்கவும். பிறகு, இந்தக் கலவையை பிளாஸ்டிக் ஷீட்டில் மெல்லிய தோசை போல தட்டி, மூன்று நாட்கள் காயவைத்து எடுத்து சேமிக்கவும். இதை நான்கு துண்டுகளாக உடைத்து, அப்பளம் போல் பொரித்து பரிமாறினால்... `ஒன் மோர் ப்ளீஸ்’ என்று எல்லோரும் கேட்பார்கள்.

- ராஜேஸ்வரி கிட்டு, புதுச்சேரி

ரசத்துக்கு புளி கரைக்கும்போது, கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கரைத்தால், சுவை கூடும்; தாளிக்கும்போது சிறிதளவு முருங்கை இலையைச் சேர்த்து தாளித்தால், மணமும் ருசியும் அதிகரிக்கும்.

- சரோஜா ஸ்ரீநிவாசன், மும்பை

கேரட், பீட்ரூட்டை சுத்தம் செய்து, துருவி தோசை மாவில் கலந்து, தோசை வார்த்தால்... கலர்ஃபுல்லாக இருப்பதுடன், சுவையும் சத்தும் அதிகரிக்கும்.

- கீதா வெங்கடேஸ்வரன், சிட்லபாக்கம்

அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். எலுமிச்சைச் சாற்றில் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர... நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

ஜாங்கிரி உடையாமல் வர வேண்டுமா..? உளுந்து விழுதுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்துவிடுங்கள்.

- நா.செண்பகா, பாளையங்கோட்டை