Published:Updated:

வாசகிகள் கைமணம்!

டேஸ்ட்டி ஐஸ்க்ரீம்... ஹெல்தி பச்சடி! ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சுண்டைக்காய் - வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் -  10 (நீளமாக நறுக்கவும்), புளி - எலுமிச்சை அளவு, பொடித்த வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.     
 
அரைக்க: காய்ந்த சுண்டைக்காய் - 10, காய்ந்த மிளகாய் - 5, எள், உளுத்தம்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா அரை ஸ்பூன்,  கறிவேப்பிலை - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 2.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். புளியை ஊறவைத்து கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் புளித் தண்ணீர் சேர்க்கவும். கொதித்ததும் உப்பு, அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்றாகக் கலந்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

இந்தக் குழம்பை சாதம், மற்றும் சப்பாத்தி தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுண்டைக்காய் சேர்ப்பதால் வயிற்றுக்கு நல்லது.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்

கேரட் ஐஸ்க்ரீம்

தேவையானவை:  கேரட் - 4, காய்ச்சிய பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், பாதாம், பிஸ்தா - தலா 10.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: கேரட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் அதை ஆறவைத்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதை காய்ச்சிய பாலில் சேர்த்துக் கலந்து சூடாக்கி, கிளறி, கொதி வந்ததும் இறக்கவும். இதை ஆறவைத்து கிண்ணத்தில் ஊற்றி, ஃப்ரீஸரில்  இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். அதை மறுபடியும் மிக்ஸியில் அடித்து ஃப்ரீஸரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். அதை மீண்டும் மிக்ஸியில் அடித்து சின்னச் சின்ன பவுல்களில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து, இரண்டு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால், சுவையான கேரட் ஐஸ்க்ரீம் ரெடி!

- எஸ்.நித்யா, கரையான்சாவடி

கம்பு பச்சடி

தேவையானவை: இளநீர், கம்பு - தலா கால் கப், புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப், சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் ஸ்பூன்,  துருவிய வெள்ளரிக்காய் - அரை கப், எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: வெறும் வாணலியில் கம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் மணத்தக்காளி கீரையை வதக்கவும் (அதிக நேரம் வதக்க வேண்டாம்) வறுத்த கம்பு, வதக்கிய கீரை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இளநீர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இத்துடன் துருவிய வெள்ளரி, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதளவு எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

சாம்பார் சாதம், சப்பாத்தி, புலாவுக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற... சுவையான, சத்துமிக்க சைட் டிஷ் இது. மணத்தக்காளி கீரைக்குப் பதில் பாலக் கீரையும் உபயோகிக்கலாம்.

- ஷாலினி, நொளம்பூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு