தன்னம்பிக்கை
Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

டிக்கடி ஏப்பம் வருகிறதா..? ஓமத்தை வறுத்துப் பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால்... நல்ல நிவாரணம் கிடைக்கும்.

- எஸ்.ஷம்ஷீன், நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

சம்புப்பொடி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், இருமல் குணமாவ தோடு, வயிற்றுப் புண்ணில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை

டிப்ஸ்... டிப்ஸ்...

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஆறவைத்து, சில நாட்கள் பருகி வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.

- சியாமளா ராஜகோபால், சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

நான்கு ஸ்பூன் கடலை மாவுடன் சிறிதளவு தேங்காய்ப்பால் கலந்து முகம், கழுத்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர... நன்கு பளபளப்பாகும்.

- வெ.தாரகை, கும்பகோணம்

டிப்ஸ்... டிப்ஸ்...

வாழைப் பிஞ்சுடன் பருப்பு, தேங்காய் சேர்த்து, காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வந்தால், குடல் புண் ஆறும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பத்துக்கு மாவு கலக்கும்போது, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்தால், ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

ளுந்து வடை செய்யும்போது உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்து மாவுடன் கலந்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

- என்.கிருஷ்ணவேணி, ஸ்ரீரங்கம்

டிப்ஸ்... டிப்ஸ்...

டீ போட்ட பின் சக்கையாக இருக்கும் டீத்தூளை தூக்கிப் போடாமல், அதை சேகரித்து ரோஜா செடிகளுக்கு போட்டால், பூக்கள் அதிகமாக, பெரிதாக பூத்துக் குலுங்கும்.

- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்

டிப்ஸ்... டிப்ஸ்...

மோர்க்குழம்பில் போட காய் இல்லை என்றால், இரண்டு சால்ட் பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து, குழம்பை பரிமாறுவதற்கு முன் அதில் போடுங்கள். வித்தியாசமான சுவையில் இருக்கும்.

- எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி

டிப்ஸ்... டிப்ஸ்...

கேரட் சாறு, தக்காளி சாறு இரண்டையும் கலந்து சிறிதளவு தேன் விட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை

கு
லாப் ஜாமூனுக்கு மாவு பிசையும்போது, தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்துப் பிசைந்தால், உருண்டைகள் உதிர்ந்து போகாமல் இருக்கும். அத்துடன் ஒரு ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க்கும் சேர்த்துப் பிசைந்தால், இனிப்பும் சுவையும் கூடும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

பொ
ரியலில் தாளிக்கப் போடும் மிளகாய்களை வீணாக்காமல், துவையல் அரைக்கும்போது அந்த மிளகாய்களை கழுவிப் பயன்படுத்தலாம்; அது விரைவில் அரைபடும்.

- ந.சாருலதா, திருச்சி

ரு கப் சாதம் வடித்த நீரில் கால் ஸ்பூன் மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால், வயிற்று உப்புசம், அஜீரணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- கௌசியா, நெய்வேலி