வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

1. கோபி குலிஸ்தான்

தேவையானவை: பெரிய சைஸ் காலிஃப்ளவர் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு: பெரிய வெங்காயம் - 4, சின்ன சைஸ் தக்காளி - 8, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தயிர் - 2 கப், முந்திரிப்பருப்பு - 10, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, வெண்ணெய் - 50 கிராம், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - அரை கப்.

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு சேர்த்த வெந்நீரில் அழுத்தி எடுத்து, சுத்தம் செய்து சின்னச் சின்ன பூக்களாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். வெங்காயத்தையும் எண்ணெயில் பொன்நிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து, இஞ்சி - பூண்டு விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். முந்திரிப்பருப்பு, கசகசா இரண்டையும் விழுதாக அரைக்கவும்.

கடாயில் அரை கப் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெண்ணெய், வெங்காய விழுது சேர்க்கவும். முந்திரி - கசகசா விழுது, மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), அரைத்த தக்காளி விழுது சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பிறகு தயிர் சேர்க்கவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு பரிமாறவும்.

சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் ஆகியவற்றுக்கு சூப்பரான சைட் டிஷ் இது.

- பத்மா வெங்கட்ராமன், அரியலூர்

2. சாமை சோன்பப்டி

தேவையானவை: சாமை அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு, கெட்டித் தயிர் - தலா அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி - சிறிதளவு.

செய்முறை: சாமை அரிசி மாவை இரண்டு தடவை சலித்துக்கொண்டு சோள மாவு, மைதா மாவுடன் நன்கு கலக்கவும். இதை தயிரில் கரைக்கவும். பொடித்த முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுக்கவும்.

சர்க்கரையை நீரில் கரையவிட்டு, அடி கனமான பாத்திரத் தில் சர்க்கரைத் தண்ணீர், தயிரில் கரைத்துவைத்த மாவு, நெய் அனைத்தையும் சேர்த்துக் கிளறவும். (தீ நிதானமாக எரியட்டும்). நன்கு கைவிடாமல் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரித்தூளை தூவி இறக்கி தாம்பளத்தில் சேர்க்கவும். ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.

வில்லைகள் மீது முழு முந்திரி அல்லது செர்ரிப் பழம் செருகி அலங்கரிக்கலாம்.

- தாரா மணிவண்ணன், கோவை

3. வேப்பம்பூ சாதம்

தேவையானவை: உதிராக வடித்த சாதம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கறிவேப்பிலை, வேர்க்கடலை - சிறிதளவு, காய்ந்த வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடுகு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புளி - கோலிகுண்டு அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை மூன்றையும் சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடித்த சாதத்தை பேஸினில் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து இறக்கி, சாதத்தில் சேர்க்கவும். வறுத்த வேப்பம்பூ, அரைத்துவைத்த பொடி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

இந்த வேப்பம்பூ சாதம் சுவையாக இருப்பதுடன், வயிற்றுப் பூச்சி பிரச்னை இருந்தால் சரியாகும்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்