கோவைக்காய் பழுத்துவிட்டால்... நறுக்கி, வதக்கி, தேவையான உப்பு, புளி, மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி தொக்கு செய்தால், சூப்பர் சுவையில் இருக்கும்.

- டி.இந்திரலட்சுமி, பம்மல்

அருகம்புல் சாறு, ஆரஞ்சுச் சாறுடன், நாட்டுச் சர்க்கரை, இஞ்சிச் சாறு கலந்து பருகினால் அசதி விலகும். இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, சீரகத்தூள் உப்புடன் நீர் சேர்த்துப் பருகினால்... மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை விலகும்.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது, கடைசியில் கடலை மாவு கொஞ்சம் தூவி, சில நிமிடங்கள் அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி இறக்கினால், சுவை நன்றாக இருக்கும்.

- ஆர்.பிருந்தா ரமணி, பெங்களூரு

சாம்பாருக்குப் போட காய்கறி இல்லையென்றால், பருப்பு வேகவைக்கும்போது அதில் ஒரு பிடி பச்சை வேர்க்கடலையையும் போட்டு அதைப் பயன்படுத்தி சாம்பார் செய்தால் ஜோராக இருக்கும்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

விருந்துண்ட பிறகு வயிறு வலித்தால்... ஒரு வெற்றிலையில் நான்கு ஓமமும் இரண்டு உப்புக் கல்லும் சேர்த்து சுருட்டி மெதுவாகச் சுவைத்து சாற்றை விழுங்குங்கள். வயிற்றுவலி ஐந்தே நிமிடத்தில் பறந்துவிடும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

கடையில் வாங்கிய உருளைக்கிழங்கு சிப்ஸ் நமர்த்துவிட்டதா...? நான்-ஸ்டிக் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, சிப்ஸைப் போட்டு அடுப்பை ‘சிம்’மில் எரியவிட்டு மூடிவைக்கவும். சில நிமிடங்களில் சிப்ஸ் மொறுமொறு என்று ஆகியிருக்கும்.

- சே.தமிழரசி, அம்பத்தூர்

இரவில் படுக்கச் செல்லும் முன்பாக தேனை யும், லவங்கப் பொடியையும் மிதமான சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

- மஞ்சு வாசுதேவன், மும்பை

வித்தியாசமான கலந்த சாதம் செய்யலாமா..? ஒரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி... உப்பு, ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), மிளகுத்தூள், நெல்லிக் காய்த்தூள் கலந்து, பொரித்த அப்பளத்தை நொறுக்கி சேர்க்கவும். இதை சாதத்தோடு கலந்து நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

- ஆர்.அஜிதா, கம்பம்

வீட்டை விட்டு வெளியே போகும்போது, கதவைப் பூட்டி அதில் சிறிய நோட்புக்கையும் அதனோடு பென்சிலையும் சேர்த்து கட்டிவிட்டுச் சென்றால், தேடி வருபவர்கள் தங்கள் முகவரியையும் போன் நம்பரையும் எழுதிவிட்டுச் செல்ல வசதியாக இருக்கும்.

- எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

- ஆர்.கீதா, கேரளா

விக்கல் விலக வேண்டுமா..? சுக்கு, மிளகு, சீரகத்தை பொடி செய்து நீர் விட்டு வெல்லம் கலந்து பருகலாம். வெல்லம், தோல் சீவி நசுக்கிய இஞ்சி, நசுக்கிய ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, நீர் கலந்து பருகலாம்.

- எஸ்.சுபா மணியன், விருதுநகர்

புளிக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார் வைக்கும்போது தக்காளியை நசுக்கிப் போடாமல், மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துப் பாருங்கள். ருசியாகவும் இருக்கும்; கெட்டியாகவும் இருக்கும்.

- எஸ்.மேகலா, தேனாம்பேட்டை

சாம்பார், கூட்டு போன்றவற்றுக்கு அரைத்து விட தேங்காய் இல்லையென்றால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை அரைத்து விட்டால் போதும். தேங்காய் அரைத்து விட்டது போலவே இருக்கும். கொழுப்புச் சத்தும் மிகவும் குறைவாக இருக்கும்.

- டி.நிர்மலா தேவி, பம்மல்