Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்...  டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

டிப்ஸ்...  டிப்ஸ்...

• உருளைக்கிழங்கு கறி செய்யும்போது இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் கிழங்கினால் ஏற்படும் வாய்வுத்தொந்தரவு ஏற்படாது.

- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• வாரம் இரண்டு முறை, தேங்காயை அரைத்தெடுத்து அதன் பாலை தலையில் தேய்த்துக் குளித்தால் முடி கருகருவென இருக்கும். செம்பட்டை நிறமும் மாறும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

• நெய்யைக் காய்ச்சி இறக்கும்போது அரை டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

- மு.சுகாரா, தொண்டி

• கற்பூர டப்பாவில் நான்கைந்து மிளகைப் போட்டு வைத்தால், கற்பூரம் காற்றில் கரையாமல் இருக்கும்.

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

டிப்ஸ்...  டிப்ஸ்...

• வேப்பிலையை அரைத்து, நீரில் கரைத்து, செடிகள் மேல் தெளித்தால் பூச்சிகள் வராது.

- ஜானகி ரங்கநாதன், சென்னை

• சப்பாத்தி மாவைப் பிசையும்போது, சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி, தண்ணீருக்குப் பதில் பாலூற்றிப் பிசைந்தால் 2, 3 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமலே மிருதுவாக இருக்கும்.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

• புளித்த தோசை மாவுடன் சிறிது சீரகம் கலந்து தோசை வார்த்தால் `கமகம’ என்று இருப்பதோடு, உடலுக்கும் நல்லது.

- ம.வேதவள்ளி, பொருள்வைத்தசேரி

• கத்திரிக்காயை சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால் கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு, சுவையும் கூடும்.

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

டிப்ஸ்...  டிப்ஸ்...

• பாகற்காய் குழம்பு வைக்கும்போது  கேரட் சேர்த்தால் குழம்பு கசக்காமல் சுவையாக இருக்கும்.

- ம.நிவேதா, பனைமேடு

• கார அடை செய்யும் போது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகிய வற்றைக்  கலந்து வைத்துக் கொண்டு அடை சுட்டால் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, அனைத்து எண்ணெய்களின் சத்தும் கிடைக்கும்.

- என்.லெக்ஷ்மி, திருச்சி