Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்!

மாலைப் பொழுதை இனிமையாக்கும் ஸ்நாக்ஸ்!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

வாசகிகள் கைமணம்!

பால் பாஸந்தி

தேவையானவை:பால் - 2 லிட்டர், முந்திரிப்பருப்பு - 20 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, சர்க்கரை - 300 கிராம், சாரைப்பருப்பு - 20 கிராம், பச்சைக்கற்பூரம் - சிறிதளவு.

செய்முறை: கனமான பாத்திரத்தில் பாலை சேர்த்து சிறு தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஆடை படிய, படிய ஒதுக்கிக்கொண்டே வந்து, பால் முழுவதும் வற்றிய பின் சர்க்கரை சேர்க்கவும். ஒதுக்கி வைத்த மற்றும் பாத்திரத்தின் உட்பகுதியில் சுற்றிலும் ஒட்டியுள்ள பாலாடைகளை கரண்டியால் எடுத்து  சேர்த்துக்கொண்டு நன்றாகக் கலந்து ஒரு கொதி வந்ததும் குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், நறுக்கிய சாரைப்பருப்பு, முந்திரிப்பருப்பு கலந்து இறக்கி வைக்கவும். ஆறியதும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசகிகள் கைமணம்!

சாமை வரகு சீடை

தேவையானவை: சாமை அரிசி மாவு, வரகு அரிசி மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு - 3 டீஸ்பூன், எள், சீரகம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வெண்ணெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: மாவுகள் அனைத்தையும் நன்கு சலித்து ஒன்றாகக் கலக்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசிறவும். பெருங்காயத்தூள், எள், சீரகத்தை மாவில் சேர்த்துக் கிளறவும். உப்பை நீரில் கரைத்து மாவில் விட்டுப் பிசையவும் (சீடையாக உருட்டும் பதத்தில்). பின்பு கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை எடுத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருட்டி, வெள்ளைத் துணி அல்லது நியூஸ் பேப்பரில் போடவும். பிறகு எண்ணெயை காயவிட்டு, உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பொரிக்கவும் (தீயை நிதானமாக எரிய விடவும்). சீடை கரகரப்பாக வந்ததும் எண்ணெயில்லாமல் வடித்து எடுக்கவும்.

- அனுராதா மணிவண்ணன், கோவை

வாசகிகள் கைமணம்!

த்ரீ கிரெய்ன்ஸ் சுண்டல்

தேவையானவை:
ஓட்ஸ், கோதுமை ரவை, ராகி மாவு - தலா ஒரு கப், உப்பு, தயிர் (புளிக்காத கெட்டித் தயிர்) - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை: ஓட்ஸ், ரவை, ராகி மாவு மூன்றையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து ஆறியதும், உப்பு, தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்த உருண்டைகளைக் சேர்த்துப் புரட்டவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவை, சத்து மிகுந்த சுண்டல் ரெடி.

- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்