Published:Updated:

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

Published:Updated:
வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

 ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

தேவையானவை:
கடலைப்பருப்பு - 300 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
கருப்பட்டி - 300 கிராம்
சோடா உப்பு - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப
ஏலக்காய் - 5

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

செய்முறை:
காலையில் இட்லி செய்ய வேண்டுமென்றால் முந்தினநாள் இரவே அரிசி மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்க வேண்டும். காலையில் தண்ணீர் இறுத்து புதுத்தண்ணீர் ஊற்றி ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இத்துடன் கருப்பட்டி மற்றும் ஏலக்காயைச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காய்த் துருவல், சோடா உப்பு சேர்த்து இட்லித்தட்டில் மாவை ஊற்றி வைத்து, ஆவியில் வேகவைத்து எடுத்தால் கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெடி. இது சுவையான, சத்தான உணவாகும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைப்பயறு வறுவல்

தேவையானவை:
முழு பச்சைப்பயறு - ஒரு கப்
சின்னவெங்காயம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் கப்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
சீரகம் - ஒரு ஸ்பூன்
இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

செய்முறை:
பச்சைப்பயறை 7 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும். வெந்த துண்டுகளை எடுத்து ஆறவைத்து சதுரத் துண்டுகளாக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பச்சைப்பயறு வறுவல் ரெடி.

- கே.ஷண்முகப்பிரியா, மேட்டூர் அணை - 3

சுரைக்காய் டோக்ளா

தேவையானவை:
சுரைக்காய் (துருவியது) - 1 கப்
கடலை மாவு - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
எள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

வாசகிகள் கைமணம்! - நாவூற வைக்கும் கடலைப்பருப்பு இட்லி!

செய்முறை:
வாயகன்ற பாத்திரத்தில் தேவையானவற்றில் கொடுத்துள்ள சுரைக்காயில் இருந்து சோடா உப்பு வரையிலான அனைத்துப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பெரிய கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும். பிறகு, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும் / ஆறியதும் சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் நெய் ஊற்றி எள், தேங்காய்த் துருவல், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். கட் செய்து வைத்த கொழுக்கட்டைத் துண்டுகளை சேர்த்து வதக்கி சிறிது உப்பு, சர்க்கரை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும். சுவையான சத்தான டோக்ளா தயார்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism