லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

1. முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்; குழம்பு வாசனையாக இருக்கும்.

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

2. பச்சை சோளத்தை 2 மணி நேரம் ஊற வைத்து வழக்கமான தோசை, இட்லி மாவுடன் கலந்து அரைத்து தோசை, இட்லி தயாரித்தால் சுவை அள்ளும்; சத்தானதும்கூட.

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை - 82

டிப்ஸ்... டிப்ஸ்...

3. காய்கறி ஜூஸ்களை உணவு வேளைக்கு முன்பாக குடிப்பது நல்லது. பழ ஜூஸ்களை காலை உணவு வேளைகளில் அருந்துவது நல்லது. மேலும், எந்த ஜூஸாக இருந்தாலும் தயாரித்தவுடன் குடிப்பது நல்லது.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை

4. பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்த பிறகு செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.

- கவிதா பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

5. ஜாதிக்காயை நெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு லட்டு, பர்ஃபி, அல்வா செய்யும்போது ஒரு சிட்டிகை சேர்த்துக்கொண்டால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

- எம்.பானுமதி, திருச்சி

6. பச்சை வேர்க்கடலையுடன் அரிசி சேர்த்து அரைத்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.

- சு.கண்ணகி, மிட்டூர்