பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

வெற்றிலையில் ஜீரணத்துக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. வெற்றிலையோடு, சிறிது சுக்கு, கிராம்பு சேர்த்துச்சாப்பிட்டால் வாய்வுப்பிடிப்பு ஏற்படாது. உண்ட உணவு விரைவில் ஜீரணமாகும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்...

சிறிது உப்போ, கற்பூரமோ போட்டு சாப்பாட்டு மேஜையை துடைத்தால் துர்நாற்றம் வராது. ஈ, கொசு, பூச்சிகள் வராது.

- எம்.வசந்தா, சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

டிக்கடி ஏப்பம் வரும்போது வேப்பம் பூவை தூள் செய்து ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

- டி.எஸ்.கிரிஜா, தஞ்சாவூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

சுவரில் ஆணி அடிக்கும்போது ஆணியின் முனையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், சுவரில் சுலபமாக ஆணி இறங்கும்.

- டி.என்.ரங்கநாதன், திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

ரு டம்ளர் எலுமிச்சை பழச்சாறுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல் குணமாகும்.

- உமா லோகு, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து பனைவெல்லம் சேர்த்து சூரணமாக சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

- எஸ்.சிவசங்கரி சரவணன், செம்பனார் கோவில்

டிப்ஸ்... டிப்ஸ்...

முறுக்கு மாவு... தேன் குழல் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் `டிஷ்யூ' பேப்பரில் மாவை வைத்து சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவமாகிவிடும்!

- மன்னை ஜி.நீலா, சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

வேர்க்கடலை, எள், தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்கள் சாப்பிடும் போது வெல்லம் கலந்து சாப்பிட்டால் கொழுப்பு சேராது.

-சி.முத்துலட்சுமி, சேலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ல்லெண்ணெயில் தும்பைப் பூவை போட்டு, காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் தலை பாரம் குறையும்.

- கு.வளர்மதி, கடலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு வராது!

- டி.இந்திரலட்சுமி, சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப்போனால் இவற்றை ஒன்றாகக் கலந்து, கெட்டியாக புளி கரைத்து சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். பிரமாதமான பொரித்த குழம்பாகிவிடும்.

- ஆர்.லட்சுமி, மதுரை-16

டிப்ஸ்... டிப்ஸ்...

லுமிச்சம் பழங்கள் மீது தேங்காய் எண்ணெய்த் தடவி ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்களுக்கு மேல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பாத்தி மிகுந்து போனால், காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து மூடி வையுங்கள். பிறகு, தேவைப்படும்போது இட்லிக் கொப்பரையில் வைத்து வேகவிடுங்கள். ஐந்து நிமிடம் ஆவி வந்த பிறகு எடுத்துப்பாருங்கள். சூப்பர் சாஃப்ட்டாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு மட்டுமே சப்பாத்தியை பயன்படுத்தலாம்.

- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்

டிப்ஸ்... டிப்ஸ்...

கொண்டைக் கடலையை ஊறவைத்த பிறகு ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து, பிறகு வேக வைத்தால், பெரிதாக வெந்து இருக்கும்.

- எஸ்.வள்ளிசேகர், அத்திப்பட்டு

டிப்ஸ்... டிப்ஸ்...

மிளகுப் பொங்கல் செய்யும்போது மிளகை முழுதாகப் போட்டு பொரிக்காமல் ஒன்றிரண்டாகத் தட்டி எண்ணெயில் பொரித்து பொங்கல் செய்தால், சாப்பிடும்போது மிளகை பொறுக்கி வீசி
வீணாக்க மாட்டார்கள்.

- கு.கோப்பெருந்தேவி, சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

டை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால், இரண்டு பிரெட் துண்டுகளைப் பொடித்து சேர்த்துவிடுங்கள். மாவும் கெட்டியாகி விடும்; ருசியும் சூப்பராக இருக்கும்.

- நா.செண்பக வல்லி, பாளையங்கோட்டை

டிப்ஸ்... டிப்ஸ்...

கொசுத்தொல்லையை போக்க, துளசி இலைகளை வெயிலில் காயவைத்து தூளாக்கி, நெருப்பு கங்குகளில் (சாம்பிராணி கரண்டி மூலமாக) போட்டு, வீடு முழுவதும் புகையைப் பரவவிடலாம்.

- கே.காந்தி, மதுரை

டிப்ஸ்... டிப்ஸ்...

  தோசைக்கு பச்சரிசியைப் பயன்படுத்தினால், அதை சிறிது வறுத்து வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், தோசை மெத்தென்று இருக்கும்.

- ஆர்.அஜிதா, கம்பம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ரைக்கீரை, முளைக்கீரை அதிகமாக வாங்கி, மிகுந்துவிட்டால், அவற்றை ஆய்ந்து வெயிலில் காய வைத்துக் கறிவேப்பிலைப் பொடி போல், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். மற்ற பொடிகளைப் போல் நெய்யுடன் சாதத்தில் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்!

- ஆர்.லலிதா நாகராஜன்,வந்தவாசி

டிப்ஸ்... டிப்ஸ்...

சிறிது உப்பும், டர்பன்டைனும் கலந்த நீரில் `சிங்க்' வாஷ்பேஸின் போன்றவற்றை கழுவினால் பளிச்சென்று இருக்கும்!

- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்

டிப்ஸ்... டிப்ஸ்...

 தினமும் ஒரு செம்பருத்திப் பூவை காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் (48 நாட்கள்) உடல் சூடு தணியும்.

- அமுதா தங்கதுரை, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

 ரவா, மைதா, அரிசி போன்றவற்றில் புழு பூச்சி, வராமல் இருப்பதற்கு, வசம்பை தட்டி இந்த பொருள்கள் உள்ள பாத்திரத்தில் போடலாம்.

- க.கலா, காகிதப்பட்டறை

டிப்ஸ்... டிப்ஸ்...

ட்லி மிளகாய்ப்பொடி அரைக்கும்போது நாம் போடும் உளுத்தம் பருப்பில் பாதியளவு கொள்ளுப்பயறையும் சேர்த்து வறுத்து, அரைத்து உபயோகப்படுத்தினால் சுவையாக இருப்பதோடு, உடம்புக்கும் மிகவும் நல்லது.

- வி.விஜயராணி, சென்னை

டிப்ஸ்... டிப்ஸ்...

  முடி அடர்த்தியாக  வளர வேண்டுமானால், கொண்டைக்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் கால் டேபிள்ஸ்பூன் எடுத்து இரண்டையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் தோலுடன் அரைத்து தலையில் தேய்த்து நீர் விட்டு அலசவும். இதில் புரதச்சத்து இருப்பதால் முடி நன்கு வளர்ந்து அடர்த்தியாகும்.

- வே.யாழினி, வேலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

  சேவை மற்றும் கொழுக்கட்டை போன்றவற்றை தயாரித்தவுடன் ஒரு வெள்ளை துணியை நனைத்துப் பிழிந்து, அந்த பாத்திரத்தின் மீது போட்டு வைத்தால் அவை மிருதுவாக இருக்கும்.

- ஜி.இந்திரா, பெங்களூரு

டிப்ஸ்... டிப்ஸ்...

 தோல் நீக்கி நறுக்கிய கேரட்டுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி தேவையான அளவு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டுவர, வயிறு தொடர்பான உபாதைகள் நீங்கிவிடும். அத்துடன் வறட்சி நீங்கி முகம் பொலிவாகும்.

- கீதா, கேரளா

டிப்ஸ்... டிப்ஸ்...

தேங்காயைத் துருவி அதை கொதித்த நீரில் போட்டு வையுங்கள். கை பொறுக்கும் சூட்டில் அதனைப் பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.

- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு