பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்

மாவரைக்கும் போது அதில் இரண்டு வெண்டைக்காய் காம்புகளை போட்டு அரைத்தால், தோசை தனி ருசியுடனிருக்கும்! உளுந்தும் அதிகம் போட்டு அரைக்க தேவையிருக்காது.

- மேரிரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

டிப்ஸ்

ப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேவையான அளவு மாவை போட்டு மூடி வைத்து 5 நிமிடம் கழித்து மாவு பிசைந்தால் கையில் ஒட்டவே ஒட்டாது.

- கு.கோப்பெருந்தேவி, சென்னை - 116.

டிப்ஸ்

பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக அரிந்து மிக்ஸியில் விழுதாக அரைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து, முகம், கை, பாதங்களில் `பேக்' போட்டு ஒரு மணி நேரம் ஊறியபின் கழுவினால், சருமம் பளிச்சிடும்.

- வெ.தாரகை, கும்பகோணம்.

டிப்ஸ்

குழந்தை பிறப்பதற்கு முன்னும், குழந்தை பிறந்த பின்னும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்கு சுரப்பதுடன் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

- எஸ்.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு