
எலுமிச்சைப் பழச்சாறுடன் பாசிப்பருப்பு மாவைச் சேர்த்து பிசைந்து, தலையில் தேய்த்துக் குளித்தால் தலையிலுள்ள அழுக்கு அகலும்.
- எஸ்.சிவசித்ரா, சென்னை


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செம்பருத்திப்பூவை அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் அழுந்தத் தேய்த்து, நன்கு ஊற விட்டு அலசினால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
- நா.செண்பகா, பாளையங்கோட்டை

தொடர் விக்கலுக்கு மாதுளையும், தொடர் காய்ச்சலுக்கு மிளகு கஷாயமும் தொடர் இருமலுக்குப் பனங்கற்கண்டும் கொடுத்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
- ர.உமாராணி, அய்யம்பேட்டை

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.
- ஏ.ரூபினா, நெய்வேலி

தொப்பை மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள ஊளைச்சதையைக் குறைக்க, அன்னாசிப்பழத் துண்டு களுடன், புதினா, வெள்ளரித் துண்டு களை மிதமான சுடுநீருடன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
- மஞ்சு வாசுதேவன், மும்பை
இரவில் படுப்பதற்குமுன் உள்ளங் காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு படுத்தால், காலையில் எழுந்ததும் கால்களை ஊன்றி நடக்கும்போது வலி இருக்காது.
- அ.சமீனா சாதிக், நெய்வேலி

வீட்டில் எறும்புப்புற்று இருந்தால் அந்த இடத்தில் கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.
- அ.அஸ்மா, நெய்வேலி

முகம் பார்க்கும் கண்ணாடியில் எண் ணெய் படிந்து முகம் தெரியவில்லையா? பழைய நியூஸ் பேப்பரால் அழுத்தி துடைத் தால் கண்ணாடி `பளிச்’ என்றாகிவிடும்.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை

பூச்சரத்தை உப்பு கலந்த நீரில் நனைத்து நன்கு உதறிவிட்டு சுவாமி படங்களுக்கு சூட்டி னால் எறும்பு மொய்க்காது; பூக்களும் நாள் முழுவதும் வாடாமலிருக்கும்.
- டி.என்.ரங்கநாதன், திருச்சி

முற்றிய வெண்டைக்காய்களை தூக்கி எறிந்துவிடாதீர்கள். அவற்றைப் பயன்படுத்தி சூப்பரான சூப் செய்யலாம். வெண்டைக்காயுடன் மிளகு, சீரகம், தக்காளி, வெங்காயம், பருப்பு வேக வைத்த தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சூப் தயாரிக்கலாம். மற்ற சூப்களில் சேர்ப்பதைவிட கொஞ்சம் கூடுதலாக உப்பு, காரம் சேர்க்க வேண்டும். சூப் தயாரானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்தால் சுவை சூப்பரோ சூப்பர்! வெண்டைக்காய் சூப் இருமலுக்கு உகந்தது.
- என்.ரம்யா, கொல்கத்தா