Published:Updated:

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

Published:Updated:
வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

பேரீச்சம்பழ அடை

தேவையானவை: பேரீச்சம்பழம் (விதை நீக்கப்பட்டது) - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய் - 5, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, வெல்லம் - கால் கிலோ, நெய் - 100 கிராம்.

செய்முறை: பேரீச்சம்பழத்தைக் சிறிது நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். வெல்லத்தை வெந்நீரில் கரையவிட்டு வடிகட்டவும். கோதுமை மாவு, மைதா மாவை ஒன்றாகப்போட்டு அதில் வறுத்த பேரீச்சம்பழத்தைச் சேர்க்கவும். பிறகு, துருவிய தேங்காய், பொடித்த முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூளைப் போட்டு நன்றாகக் கலந்து வெல்ல நீரைச் சேர்க்கவும். அடை மாவு பதத்துக்குக் கலவையைத் தயார் செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, நெய் விட்டு அடைகளாக வார்க்கவும்.

 இந்த இனிப்பு அடை, சத்தும் சுவையும் கொண்ட அருமையான சிற்றுண்டி!

- சியாமளா ராஜகோபால், சென்னை-64

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

அறுசுவை சாலட்

தேவையானவை: வாழைப்பூ, கொடுக் காய்ப்புளி காய் (இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது), நெல்லிக்காய் (பெரியது), மாதுளம்பழ முத்து, மிளகுப்பொடி, உப்பு, பனங்கற்கண்டு, தேங்காய்த்துருவல் - தேவையான அளவு.

செய்முறை:வாழைப்பூவின் உட்பகுதி இளசாக இருக்கும்... நரம்பு இருக்காது. அதை எடுத்து பொடியாக நறுக்கவும். கொடுக்காய்ப்புளி காய்களை நறுக்கவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, துருவிக்கொள்ளவும். இதேபோல தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து மிளகுப்பொடி, உப்பு சேர்த்து மாதுளைம்பழ முத்துக்களைக் கலந்து, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.

 இந்த சாலட்டில் ஆறு சுவைகளுடன் பெண் களுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. எடைக் கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடிய இது ரத்தத்தை விருத்தி செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் சாலட்!

- ஜானகி ரங்கநாதன், சென்னை-4

வாசகிகள் கைமணம்! - லேடீஸ் ஸ்பெஷல்!

தூதுவளை சூப்

தேவையானவை: தூதுவளைக்கீரை - ஒரு கப், வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தூதுவளைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். பூண்டினை தோலுரித்து நசுக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவளைக்கீரையைச் சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் விடவும். அதில் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, தூதுவளைக்கீரை வெந்ததும், அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

 இது சளித்தொல்லையில் இருந்து விடுபட வழிவகுக்கும் ஒரு பானம்!

- மு.சுகாரா, தொண்டி