Published:Updated:

வாசகிகள் கைமணம்! - சுவையான இட்லி... சூப்பர் கஞ்சி!

வாசகிகள் கைமணம்! - சுவையான இட்லி... சூப்பர் கஞ்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்! - சுவையான இட்லி... சூப்பர் கஞ்சி!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

வாசகிகள் கைமணம்! - சுவையான இட்லி... சூப்பர் கஞ்சி!

கோதுமை இட்லி

தேவையானவை: கோதுமை - 300 கிராம் (தோலை குத்தி எடுக்கவும்), உளுத்தம்பருப்பு - 75 கிராம்.

செய்முறை: கோதுமையை ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைக்க வேண்டும். உளுத்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் அரைத்து, உப்புச் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். எட்டு மணி நேரம் வைத்திருந்து இட்லி அல்லது தோசை செய்யலாம்.

இதேபோல தீட்டிய கம்பு, கேழ்வரகு போன்றவற்றிலும் மாவு அரைத்து இட்லி, தோசை தயாரிக்கலாம். இவை மிருதுவாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாகும். இவற்றுடன் காய்கறிகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கலந்தால் காய்கறி இட்லி தயார்.

- விமலா சடையப்பன், காளனம்பட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசகிகள் கைமணம்! - சுவையான இட்லி... சூப்பர் கஞ்சி!

தானிய கஞ்சி

தேவையானவை: கரும்புச்சாறு - ஒரு டம்ளர், தினை, கம்பு, வரகு, ராகி, சாமை - தலா 2 டீஸ்பூன்

செய்முறை: தானியங்களை (வாணலியில் எண்ணெய் ஊற்றாமல்) வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வறுத்தவற்றை கொதி நீரில் போட்டு குக்கரில் வைத்து வேக விடவும்.

வெந்தவற்றை எடுத்து, மத்து அல்லது கரண்டியினால் நன்றாக மசித்து, கரும்புச்சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். விரும்பினால் ஏலக்காய்த்தூள், தூள் செய்யப்பட்ட பாதாம் பருப்பைப் போட்டு கலக்கலாம். நல்ல சுவை மிகுந்த சத்தான கஞ்சி இது.
 
- அனுராதா மணிவண்ணன், கோவை

குழம்பு வடகம்

தேவையானவை: தட்டைப்பயறு - 400 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 10, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, தட்டைப்பயறை ஊற வைத்து, அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி பாலித்தீன் பேப்பரில் வைத்து, வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுக்கவும். இதை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- ஆர்.பிருந்தா ரமணி, பெங்களூரு