Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

டிப்ஸ்... டிப்ஸ்...

ரு ஸ்பூன் விளக்கெண்ணெயை பாலுடன் கலந்து, தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிவதோடு, மலச்சிக்கல் பிரச்னையும் சரியாகும்.

- புவனா சாமா, ஸ்ரீரங்கம்

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாழைப்பழத் தோலைக் கண் ணாடி குத்திய இடங்களில் வைத்து கட்டினால் ரத்தப்போக்கு நிற்பதோடு, விரைவில் குணம் கிடைக்கும்.

- பஹமி சமி, கடலூர் - 1

டிப்ஸ்... டிப்ஸ்...

குதிரைவாலி, கம்பு, தினை, வரகு போன்ற சிறுதானியங்களை வறுத்துப் பொடியாக்கி ஓட்ஸுடன் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறுவதோடு பசியும் அடங்கும்.

- இந்திரா சந்திரன், திருச்சி - 1

டிப்ஸ்... டிப்ஸ்...

சின்ன வெங்காயத்தை உரித்து நெய் விட்டு வதக்கி இரவு நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

- எம்.வசந்தா, சென்னை - 64

டிப்ஸ்... டிப்ஸ்...

ருமனாக இருப்பவர்கள் கொழுப்பு உள்ள பால் சாப்பிடு வதைத் தவிர்க்க வேண்டும். அதே வேளையில் ஆடை நீக்கிய பால், காய்கறி சூப் போன்றவற்றைப் பருகினால் பலன் கிடைக்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

டிப்ஸ்... டிப்ஸ்...

பொன்னாங்கண்ணிக்கீரை வேகவைத்த நீரில் (பொறுக்கும் சூட்டில்) 10 நிமிடங்கள் கால் அலம்பினால், பாதங்கள் பளிச் சென்று மிளிரும்.

- லெட்சுமி மணிவண்ணன், பனைமேடு