Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

டிப்ஸ்... டிப்ஸ்...

வெங்காய வடகம் செய்யும்போது நார்த்தங்காய் இலைகளைப் பொடி செய்து சேர்த்தால், வடகம் தாளித்த சாம்பார் மேலும் சுவையாகவும் மணமாக வும் இருக்கும்.

- சு.கண்ணகி, மிட்டூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேரட், பீட்ரூட் போன்றவை வாடிப்போனால் நறுக்குவது கடினம். அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியதுபோல ஆகிவிடும். நறுக்குவதும் எளிதாகும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை

டிப்ஸ்... டிப்ஸ்...

புடலங்காயின் விதைகளை எடுத்து வதக்கி, உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து, புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால், சுவையாக இருக்கும்.

- அலமேலு ராகவன், கோவை - 46

டிப்ஸ்... டிப்ஸ்...

முற்றின தேங்காயைப் பல்லுப்பல்லாக நறுக்கி நெய்யில் சிவக்க வறுத்துப் பாயசத் தில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

டிப்ஸ்... டிப்ஸ்...

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது கல் உப்புப் போட்டு வறுத்தால் கமறல் ஏற்படாது. வீடு சின்னதாக இருந்தாலோ, வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தாலோ, நெடியில்லாமல் காய்ந்த மிளகாய் வறுக்க இந்த முறையைப் பின்பற்றலாம்.

- மீனா சாதிக், நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ண்டு, பூச்சிக்கடிக்கு வெள்ளைப்பூண்டை அரைத்து கடிவாயில் கட்ட... விஷம் முறியும்.

- விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை - 87

டிப்ஸ்... டிப்ஸ்...

வெங்காயம், சுடுசோறு, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கட்டினால், நகச்சுற்று குணமாகும்.

- ஆர்.சங்கவி, நல்லாலம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்பாளிக்காயை கூட்டு, பொரியல் என சமைத்துச் சாப்பிட்டு வந்தால், பருமன் குறையும்.

- ஆர்.அம்மணி, வடுகப்பட்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

பூசணிக்காயை ச் சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களை ச் சுற்றி பற்று போட்டால், நாளடைவில் கருவளையம் மறையும்.

- புவனா நாகராஜன், செம்பனார்கோவில்

டிப்ஸ்... டிப்ஸ்...

செம்பனார்கோவில் குழந்தைக ளுக்குத் தொடர் இருமல் வந்தால் பெருங்காயத்தை வெந்நீர் விட்டுக் கரைத்து, அது தெ ளிந்ததும் நீரை மட்டும் கொடுக்க... இருமல் குணமாகும்.

- கௌசியா அஜீஸ், நெ ய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ஜ்ஜி செய்யும்போது ஒரு கரண்டி இட்லி மாவை, அதில் கலந்து செய்தால், பஜ்ஜி உப்பி, சுவையாக இருக்கும்.

- அ.ரூபினா, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ப்ரைடு ரைஸ், தேங்காய் சாதம் செய்யும்போது முதலில் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கசகசா வைப் போட்டுத் தாளித்து, பிறகு மற்ற மசாலாப் பொருள்களைச் சேர்த் தால், சுவை கூடும்.

- பகவதி பிரவின், சென்னை - 91