Published:Updated:

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:
வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

புரோக்கோலி வடை

தேவையானவை:
சிறு துண்டுகளாக உதிர்த்த புரோக்கோலி -  ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - அரை கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், துருவிய கேரட் - அரை கப், பூண்டுப்பல் - 4, இஞ்சி (தோல் சீவியது) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் புரோக்கோலியை 3 நிமிடங்கள் போட்டு நீரை வடிகட்டி எடுக்கவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டிய கொண்டைக்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையுடன் புரோக்கோலி, கேரட், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பருப்புக் கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

புரோக்கோலி இதயத்துக்குப் பலம் கொடுக்கும்.

- விஜயலக்ஷ்மி, மதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

பேரீச்சம்பழப் பாயசம்

தேவையானவை:
பேரீச்சம்பழம் - ஒரு கப் (கொட்டை நீக்கியது), தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, ஒரு கொதிவிட்டு, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் தேங்காய்ப்பாலுடன் அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்லப்பாகைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

வித்தியாசமான சுவையுடனும், கமகமவென்ற மணத்துடனும் இருக்கும் பேரீச்சம்பழப் பாயசம், ஆரோக்கியத்துக்கும் நல்லது.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்

வாசகிகள் கைமணம்! - சுவை... ஆரோக்கியம் தரும் சூப்பர் ரெசிப்பிகள்!

அத்திக்காய் போளி

தேவையானவை: அத்திக்காய் - ஒரு கப், வேகவைத்த சென்னா (கொண்டைக்கடலை), பொடித்த வெல்லம் - தலா முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

மேல்மாவுக்கு:
மைதா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: அத்திக்காயை ஒன்றிரண்டாக உடைத்து குக்கரில் வேகவைத்து ஆறியதும் தண்ணீர்விடாமல் மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த சென்னாவையும் நீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். பின்னர் வெல்லத்தை நீர்விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். வாணலியில் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள், அரைத்த சென்னா, அத்திக்காய் விழுதை சேர்த்து லேசாகக் கிளறி பூரணம் தயாரித்துக்கொள்ளவும். மைதா மாவுடன் நெய், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாழை இலையில் எண்ணெய் தடவி, மேல் மாவில் ஓர் உருண்டை எடுத்து வைத்து போளியாகத் தட்டி உள்ளே அத்திப்பூரணம் வைத்து மூடி, பின்பு மீண்டும் தட்டவும். எல்லா மாவையும் இப்படி செய்துகொள்ளவும். தவாவைச் சூடாக்கி, போளியைப் போட்டு சிறிதளவு எண்ணெய்விட்டு சுட்டெடுத்து, சூடாகப் பரிமாறவும்.

அத்திக்காய் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் நல்லது.

- ரஜினி பாலசுப்பிரமணியம், மடிப்பாக்கம்

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

அத்திக்காய் போளி:
அத்திக்காயுடன் இரண்டு அத்திப்பழத்தையும் சேர்த்து வேகவைத்து செய்தால், சுவை கூடும்.

பேரீச்சம்பழப் பாயசம்: இரண்டு பாதாம், இரண்டு முந்திரியை அரைத்துச் சேர்த்துச் செய்தால், மேலும் ருசியாக இருப்பதுடன், சத்தும் அதிகமாக கிடைக்கும்.

புரோக்கோலி வடை: தக்காளி - வெங்காயம் சட்னி இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism