Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

வா கேசரி செய்யும்போது முதலில் ரவையைச் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊறவைத்து, அதைப் பயன்படுத்தி கேசரி  செய்தால், சுவை கூடுவதுடன் அதிகமான அளவும் கிடைக்கும்.

- பத்மா வெங்கட்ராமன், ரெட்டிப்பாளையம்

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வ்வொருமுறை தோசை சுடும் முன்பும் தோசைக்கல்லின் மீது கட் செய்த உருளைக்கிழங்கி னால் நன்கு தேய்த்தால், பிறகு தோசை சுடுவது சுலபமாக இருக்கும்.

- எஸ்.சாந்தி, திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்துபோனதும், அதில் பாலை ஊற்றினால், ஒட்டிக்கொண்டிருக் கும் ஜாம், பாலுடன் கலந்து கரைந்ததும் அந்தப் பாலை அருந்த, சுவையில் அசத்தும்... ஜாமும் வீணாகாது.

- டி.என்.ரங்கநாதன், திருச்சி

டிப்ஸ்... டிப்ஸ்...

ளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிதளவு துவரம் பருப்பைச் சேர்த்து அரைத்தால், வடை மிருதுவாக இருக்கும்.

- எஸ்.சடையப்பன், காளனாம்பட்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

ரண்டு தக்காளிப் பழங் களை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து அடித்து...  கால் கிலோ கோதுமை மாவு, உப்பு, இரண்டு ஸ்பூன் நல்லெண் ணெய் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால், நல்ல கலருடன் உப்பலாகப் பொரிந்து, அபார சுவையுடன் இருக்கும்.

- ஆ.அஜிதா, கம்பம்

டிப்ஸ்... டிப்ஸ்...

வ்வரிசி வடாம் செய்யு தண்ணீர் கொதிக்கும்போது சீஸைத் துருவிப் போடுங்கள். வடாம் காய்ந்து பொரிக்கும்போது நல்ல சுவையுடன் இருக்கும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

டிப்ஸ்... டிப்ஸ்...

நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப்பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல்லில் ரத்தம் வடிதல் பல் ஈறுகளில் வரும் நோய் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- ஆர்.லட்சுமி, மதுரை

டிப்ஸ்... டிப்ஸ்...

ஸ்விட்ச் போர்டை சுற்றியிருக்கும் அழுக்கை நீக்க... நெயில் பாலிஷ் ரிமூவர் லோஷனில் சிறிது பஞ்சை நனைத்து துடைக்கலாம். அழுக்கு நீங்கி பளிச் என்று இருக்கும். போகும்.

- டி.வர்ஷினி, நெய்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

நெல்லிக்காய், பேரீச்சம்பழம், தேன் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து அருந்தினால், குற்றாலத்தில் குளித்ததுபோல உடம்பே  ஜில்லென்றாகி விடும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்