Published:Updated:

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200, படங்கள்: ஆ.முத்துக்குமார்

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

ஃப்ரூட்ஸ் மாக்டெயில்

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

தேவையானவை: மாதுளை முத்துகள், விதை நீக்கிய சாத்துக்குடி, சப்போட்டா, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம் கலவை - 2 கப், ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப, தேன், சர்க்கரை - சிறிதளவு.

சிரப் செய்ய: சர்க்கரை, தண்ணீர் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பழக்கலவையை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிடவும். குமிழ்கள் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். சர்க்கரை சிரப் தயார்.

ஒரு தட்டில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து, அதன் விளிம்பில் தேன் தடவி, சர்க்கரை தூவிய தட்டின்மேல் டம்ளரை கவிழ்த்து, மெதுவாகச் சுழற்றவும். கண்ணாடி டம்ளர் விளிம்பில் சர்க்கரை படிகமாக உருவாகும். இந்த டம்ளரில் ஜூஸை ஊற்றி உடன் சர்க்கரை சிரப் சேர்த்து, ஐஸ் கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.

- பி.சந்திரகலா, பெரம்பூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

தினை காரக் குழிப்பணியாரம் - கொள்ளு காரச்சட்னி

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

தேவையானவை: சாமை, குதிரைவாலி, இட்லி அரிசி - தலா 100 கிராம், உளுந்து - 2 டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கொள்ளு காரச் சட்னி செய்ய: கொள்ளு - 3 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, புளி, புதினா இலை - தேவையான அளவு, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 செய்முறை: சாமை, குதிரைவாலி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைத் தாளித்து மாவில் சேர்க்கவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கேரட், இஞ்சித் துருவலை வதக்கி சேர்க்கவும். குழிப்பணியாரக்கல்லில் மாவை ஊற்றி, நல்லெண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். தினை காரப் பணியாரம் தயார்.

கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், புதினா இலை, தக்காளியை வதக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, புளி, உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும். பணியாரத்துக்கு தொட்டுக்கொள்ள ருசியான துவையல் ரெடி.

குதிரைவாலி - இதயநோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். சாமை - முதுகுவலியைக் குறைக்கும்.

- எஸ்.மீனா, ஸ்ரீரங்கம்

சுண்டைக்காய் அடை

வாசகிகள் கைமணம் - ஜில்லுனு டிரிங்க்... சுடச்சுட ஸ்நாக்ஸ்!

தேவையானவை: வறுத்து அரைத்த கொள்ளு மாவு, கம்பு மாவு - தலா 50 கிராம், சுண்டைக்காய் - 75 கிராம், வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு சீரகம், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். சுண்டைக்காயையும் தட்டி அதனுடன் சேர்த்து வதக்கி இறக்கி, உப்பு சேர்க்கவும். பிறகு அதில் கம்பு மாவு, கொள்ளு மாவைச் சேர்த்து தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு, நறுக்கிய புதினா, கறிவேப்பிலையையும் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சுண்டைக்காய் மருத்துவ குணம் நிறைந்தது.

- சாந்தி சுந்தர், சென்னை - 20

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

ஃப்ரூட்ஸ் மாக்டெயில்:
பழங்களுடன் 5 புதினா இலைகளை சேர்த்து அரைத்து ஜூஸ் செய்தால் வித்தியாசமான மணக்கும் சுவை கிடைக்கும்.

சுண்டைக்காய் அடை:
சுண்டைக் காய்க்குப் பதில் பரங்கிக்காய் சேர்த்து (பொடியாக அரிந்து) செய்தால் நன்றாக இருக்கும்.

தினை காரக்குழிப்பணியாரம்:
இட்லி மாவு அரைக்கும்போது  ஊறவைத்த சிகப்பு அவல் 2 பிடி கலந்து அரைத்தும் செய்யலாம்.