தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100

டிப்ஸ்... டிப்ஸ்...

தேங்காய் பர்ஃபி செய்யும்போது, சர்க்கரையை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் நன்றாகப் பொடி செய்து சேர்த்தால், பர்ஃபி சூப்பர் சுவையில் இருக்கும்.

- ஹெச்.சீதாலக்ஷ்மி, அலுவா

டிப்ஸ்... டிப்ஸ்...

டை தயாரிக்க பருப்புகளைச் சேர்ப்போம். அப்போது வெள்ளை உளுந்துக்குப் பதிலாக கறுப்பு உளுந்து பயன்படுத்தினால், அடை அசத்தலாக இருக்கும்.

- ஜி.இந்திரா, பெங்களூரு - 37

டிப்ஸ்... டிப்ஸ்...

வாழைக்காயைச் சமையலில் பயன்படுத்தும்போது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.

- ரெ.கயல்விழி, வடுகப்பட்டி

டிப்ஸ்... டிப்ஸ்...

கேரட்டை வேகவைக்கும் போது ஓரிரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், தனிச் சுவையும் மண மும் கிடைக்கும்.

- அ.யாழினி பர்வதம், சென்னை - 78

டிப்ஸ்... டிப்ஸ்...

கோதுமை மாவு அரைக் கும் போது அதனுடன் சிறிதளவு சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால், அந்த மாவில் செய்யும் சப்பாத்தி கூடுதல் சுவையுடன் இருப்பதோடு, ஊட்டச்சத்தும் அதிகமாக கிடைக்கும்.

- வி.மீனாட்சி, மதுரை - 16