தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!

வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

டயட் சூப்

வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!

தேவையானவை: நறுக்கிய பீட்ரூட் - ஒரு கப், நறுக்கிய தக்காளி, கேரட் - தலா அரை கப், சாம்பார் வெங்காயம் - 3 (நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை: நறுக்கிய காய்களுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் அரைத்து, அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒரு கொதி வந்த பிறகு... உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பருக... சுகமோ சுகம்!

டயட் சாலட்

வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!

தேவையானவை: நறுக்கிய பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர், முள்ளங்கி கலவை - ஒன்றரை கப் (அரை வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும்), பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி, குடமிளகாய் (சேர்த்து) - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஆலிவ் ஆயில், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: காய்கள் அனைத்தையும் பெரிய பவுலில் போட்டு, உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ஆலிவ் ஆயில் விட்டு நன்கு கிளறவும். கொத்த மல்லித்தழையை மேலாகத் தூவி பரிமாறவும்.

டயட்டில் இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால்... 3 மணி நேரம் பசி தாங்கும். இது, வாய்வுத்தொல்லையைத் தடுக்கும்; ஜீரணச் சக்தியை அதிகரிக்கும்.

- சீனு சந்திரா, மயிலாப்பூர்

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

டயட் சாலட்:
சாலட் உடன் பனீர் சேர்த்துக்கொண்டால் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

டயட் சூப்: சூப் செய்ய காய்கறிகளை வேகவைக்கும்போதே சிறிதளவு பார்லியை சேர்த்து வேகை வைத்தால், மேலும் சுவையாக இருப்பதோடு, உடலும் குளிர்ச்சியாகும்.

ராகி - வேர்க்கடலை பாயசம்: வேர்க் கடலையைப் பொடிக்கும்போதே பாதாம், முந்திரியையும் சேர்த்தால் வாசனை, ருசியில் அசத்தும்.

வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ!

ராகி - வேர்க்கடலை பாயசம்

தேவையானவை: ராகி மாவு - 20 கிராம், வறுத்த வேர்க்கடலைப் பொடி - 5 கிராம், நாட்டுச் சர்க்கரை - 20 கிராம்

செய்முறை:
ராகி மாவுடன் வேர்க்கடலைப் பொடியைக் கலக்கவும். இதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்துக் கட்டிதட்டாமல் நன்கு கலக்கவும். கால் டம்ளர் தண்ணீரை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் ராகி மாவு - வேர்க்கடலை மாவு கலவையை ஊற்றி நன்றாக கலக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்கவும். ஆறிய உடன் பரிமாறவும்.

இது... புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து அடங்கிய பானமாகும்.

- எம்.வசந்தா, சென்னை - 64