
ஆவக்காய் ஊறுகாய் போடும்முன் நறுக்கிவைத்த மாங்காய்களை ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்து, எடுத்து ஊறுகாய் போட்டால், நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.
- லலிதா ராஜப்பா, சூளைமேடு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தயிர் வடை செய்யும்போது, வடை யின் மேல் ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீறிவிட்டு தயிரில் ஊறவைத் தால், தயிர் எளிதாக வடையினுள் சென்று ருசியைக் கூட்டும்.
- என்.கோமதி, பெருமாள்புரம்

ஒரு கிலோ சர்க்கரையில் 200 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, ஆறவிட்டு எடுத்து வைத்தால், சர்க்கரை சிரப் தயார். இதை தேவையானபோது குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
- எஸ்.வெண்மதி, மயிலாப்பூர்

தோசைக்கல்லில் எண்ணெய் பிசுக்குப் போக... கல் சூடாக இருக்கும்போதே ஒரு நியூஸ் பேப்பரினால் நன்றாக அழுத்தித் துடைக்க வேண்டும். பிறகு, ஒரு துணியில் தண்ணீர் தொட்டுத்துடைத்தால், தோசைக்கல் பளிச் என்று சுத்தமாக இருக்கும்.
- பிரேமலா ஸ்டீபன், ஆலந்தூர்-16

வெண்ணெய்யு டன் கொத்தமல்லிச் சாற்றைக் கலந்து கண்களுக்கு `பேக்’ போட் டால், கருவளையம் நீங்கி கண்கள் பிரகாச மாக இருக்கும்.
- ஆர்.சங்கவி, கோவிலூர்- 4

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால், அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின்னர் கழுவினால், மண் வாசனையும் வராது; விரிசலும் விடாது.
- முத்தூஸ், ராமநாதபுரம் - 9

மைக்ரோவேவ் அவனின் உள்ளே துணுக்குகள் அதிகமாக இருந்தால், ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடங்கள் கழிந்ததும் எளிதாக துடைத்து சுத்தம் செய்துவிடலாம்.
- கே.எல்.புனிதவதி, கோவை - 17

கேழ்வரகு மாவுடன் எள்ளும், வெல்லமும் கலந்து அடை செய்து சாப்பிட்டால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
- லெட்சுமி மணிவண்ணன், நாகை - 8

மிக்ஸியில் வேலை முடிந்ததும் கால் டம்ளர் சுத்தமான தண்ணீரை ஜாரில் விட்டு ஓடவிடுங்கள். மிக்ஸியில் மிகுந்து இருக்கும் துகள்கள் வெளியே வந்துவிடும். இதனால் பிளேடுகள் அடிக்கடி நின்று போகிற தொந்தரவு இருக்காது.
- சித்ரா வேடியப்பன், திருவண்ணாமலை - 11