வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்

ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃப்ளேக்ஸ் மில்க்ஷேக்

தேவையானவை: விரும்பிய பழங்கள் (நறுக்கி, விதை நீக்கியது) - ஒரு கப், கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப், பால் - ஒரு கப், தேங்காய்ப்பால் - அரை கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: பாலில் கார்ன் ஃப்ளேக்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் அரைத்து இக்கலவையுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: `திக்’காக இருந்தால் சிறிது பால் சேர்த்து தளரவைத்துப் பரிமாறலாம்.

- பி.கே. பிரேமிகா, சென்னை - 11

மாங்காய் புளியோதரை சாதம்

தேவையானவை: நாரில்லாத மாங்காய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, மல்லி (தனியா) - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், மிளகு, எள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - சிறிய துண்டு

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை பொடியாக அரைத்துக்கொள்ளவும். மாங்காயைத் தோல் நீக்கித் துருவிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் தாளித்து... கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, துருவிய மாங்காய், உப்பு சேர்த்து சுருளக் கிளறவும். வாயகன்ற பாத்திரத்தில் உதிரியாக வடித்த சாதத்தைப் போட்டு மாங்காய் விழுது சேர்த்துக் கலந்து, வறுத்து அரைத்த பொடி சேர்த்துக் கிளறவும். மாங்காய் புளியோதரை தயார்.

குறிப்பு: மாங்காய் விழுதில் உப்பு இருப்பதால் சாதத்தில் உப்பு தேவைப்பட்ட அளவு பார்த்து சேர்க்கவும்.

- சங்கரி வெங்கட், புது பெருங்களத்தூர்

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 (அ) 3, வெல்லம் - ஒரு சிறு கட்டி, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் வேப்பம்பூவையும் வறுத்து எடுக்கவும். வறுத்த பொருள்களை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு... வேப்பம்பூ, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இந்தத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்க உதவும்.

- பத்மா சுப்ரமணியன், அடையாறு

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்

மாங்காய் புளியோதரை சாதம்:

வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்தால் சுவை கூடும். மஞ்சள்தூளை தவிர்க்கலாம்.

வேப்பம்பூ துவையல்:

வேம்பம்பூவை நெய்யில் வதக்கிச் சேர்ப்பதால் பூவில் உள்ள கசப்புத் தன்மை சற்று குறையும். அதனால் நெல்லிக்காய் அளவு புளியைச் சேர்த்துக் கொண்டால் போதும்.

ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃப்ளேக்ஸ் மில்க்ஷேக்:

ஃபுரூட் கீர் செய்யும்போது தேங்காய்ப்பால் தவிர்த்துப் பாலுடன் சிறிது கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் சுவை கூடும்.