Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

டிப்ஸ்... டிப்ஸ்...

ருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்யும்போது மேலாகச் சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

- டி.இந்திரலட்சுமி, சென்னை-75

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோர்க்குழம்பு செய்ய தேவையான அளவு புளித்த மோர் இல்லையென்றால், புளிப்பான மூன்று தக்காளிகளை மோர் குழம்புக்குத் தேவையான பொருள்களுடன் சேர்த்து அரைத்தால், புளிப்புச் சுவை வந்துவிடும்.

- ஆர்.அஜிதா, கம்பம்-16    

டிப்ஸ்... டிப்ஸ்...

போண்டாவுக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், மாவை அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ரவையைக் கலந்து பிசைந்து சற்று நேரம் ஊறியபின் போண்டா செய்தால், போண்டா மொறுமொறுவென்று தனிச்சுவையோடு இருக்கும்.

- தேவி பெருமாள், மவுலிவாக்கம்-25

டிப்ஸ்... டிப்ஸ்...

சீதாப்பழத்தின் விதைகளைக் காயவைத்துப் பொடி செய்யுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால், பேன்கள் மறையும்; முடியும் பளபளப்பாக இருக்கும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி-48

டிப்ஸ்... டிப்ஸ்...

கோதுமை மாவைச் சலிக்கும்போது கிடைக்கும் தவிட்டில் தயிரைக்கலந்து உடலில் தேய்த்துக் குளித்தால், வெயிலினால் வரும் எரிச்சல், அரிப்பு விலகும்.

- உஷா முத்துராமன், மதுரை - 6

டிப்ஸ்... டிப்ஸ்...

மிகுந்துபோன வாழைக்காய், உருளைக்கிழங்கு சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி - 6